Wednesday, June 20, 2012

1192: You complete me – நீயின்றி ...

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

1192    காமத்துப்பால் கற்பியல்- தனிப்படர்மிகுதி 
Sexuality- Post-Marital love-Loneliness

Vaazhvaarkku vaanam payanthatraal veezhvaarkku
Veezhvaar aLikkum aLi

Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/kaamathu-paal/1192.mp3


கணவன்-மனைவிக்கு இடையே உள்ள காதலின் நெளிவு-சுளிவுகளை நான் அறிந்தவரையில் திருக்குறளே மிகச்சுவையுடன் விவரிக்கிறது. திருமணத்துக்கு  முன் உள்ள காதலை விட தன் பின் உள்ள காதல் வேறுபட்டது.  முன்னதில் பொறுப்பும் கவலையும் கிடையாது – வேட்கையும் தாபமுமே  ஓங்கி இருக்கும்.  இந்த அதிகாரம் கணவன்-மனைவி ஒருவர்கொருவர் எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை பற்றியது. (தனிப்படர்மிகுதி = தனியாகிய படர் மிகுதி)

“ஒருவர் இல்லையேல் மற்றவரும் இல்லை என்று புரிந்து கொண்ட தம்பதிகளுக்குள் உள்ள காதல் தன்னையே பார்த்த பூமிக்கு வானம் அளிக்கும் மழை போன்றது.  பயிர் வளர கணவன்-மனைவி மழை எவ்வளவு தேவையோ, அதே அளவுஅவர்கள் உறவு தழைக்க  அந்த அன்பு தேவை.” என்று கணவன்-மனைவி பிணைபிற்புக்கு உள்ள ஆழத்தை உணர்த்தும் குறள் இது.

இதில் கவனிக்க வேண்டிய கருத்து கணவன் மனைவி இருவரும் மற்றவர் இல்லாமல் முழுமையாக மாட்டார் என்பதே.  இதை அந்த தம்பதி உணர வேண்டும்.  இந்த கருத்தை “வீழ்வார்” என்ற ஒற்றை சொல்லின் மூலம் உணர்த்தும் வள்ளுவருக்கு நிகரேது?

(அளி = அன்பு, காதல்; படர் = துயரம்)

In world literature, I think the Thirukkural stands alone in its celebration of marital love.  The obvious relish in talking about the relationship between a husband and wife, from the daily bickering to the lofty heights achieved in intercourse to the sheer expression of love for each other, sets it apart.  Pre-marital love is carefree and driven by desire.  Post-marital love is like a lotus, made that much more beautiful by being mired in the mundane.  This chapter talks about the distress caused by the separation of the other half.  This need not only be physical separation, as this couplet reveals:

“The love between a couple that realizes that one will not survive without the other is like the rain that falls on the land that is eagerly waiting for it.  For the land to prosper, the rain is necessary.  For the relationship between the couple to burgeon, the love between them is indispensable”

This sense of completion by the other is a very nice concept.  From a literary standpoint, Valluvar conveys the full import of the concept by just using one word – veezhvaar.  Roughly, it translates to “Fallen” saying that the one without the other is useless.  This brevity in a avowedly tough, concise metre is delicious.

Image courtesy: http://www.poetryismylife.com/2011/04/you-complete-me.html 

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar Sexuality, Post-Marital love, Loneliness,குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி  


Blog link: http://kftd.blogspot.in/

34/1330

No comments:

Post a Comment