Wednesday, October 24, 2012

KFTD – 64: Cleanliness may be godly but this mess is heavenly!



அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

64    அறத்துப்பால், இல்லறவியல், புதல்வரைப் பெறுதல்
            Spiritual Matters, Domesticity, Children
     

Amizhthinum aatra inithetham makkal
Sirukai alaaviya koozh

Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/arathu/64.mp3





“To parents, the porridge dirtied by their children is better even than the nectar that the Gods cherish”

In Hindu culture, producing children is not merely a requirement for furthering one’s genes.  A child is necessary for one to cross the path charted out for a soul after death.  In that context, this chapter would have fulfilled the requirements of structure and content, had it merely stressed the importance of children.  However, this chapter, puthalvarai peruthal, goes beyond that and focuses on the sheer joy toddlers give parents.

Children are dear to their parents.  Biology and  sociology combine to elevate every action of the tot to a acme of achievement in the eyes of otherwise stable parents.  Every couple thinks it invented sex and every parent thinks that they have had the bestest, most perfect child.  This is why actions otherwise mundane or even distasteful are imbued with the glow of perfection.  The bard, by talking about the pleasure kids give to their parents, elevates this chapter to a plane of true Truths.

In this couplet, Valluvar talks about how mere porridge, that lowliest, blandest of dishes, which has further been contaminated by a child’s fresh-from-play fingers tastes so heavenly merely because the kid in question belongs to one.  Any other kid and the dish will meet the trash can and the child roundly condemned as a ‘dirty, spoilt brat”.  This is an experience all parents have had and by using such a common example, he brings home the joy of ones’ own kids very powerfully.

In my limited knowledge, it is only in Indian literature that childhood is so celebrated – every facet of childhood has been an inspiration for a song or a story.  For a society so in love with its toddlers, it is such a pity that we systematically make such conformists of them not much later.

பெற்றோருக்கு, தம்முடைய குழந்தை கைவிட்டு அளாவி அசிங்கப்படுத்திய கூழ் தேவர்கள் விரும்பும் அமுதைவிட ருசியாக இருக்கும்” என்று அறுதியிட்டுக் கூறுகிறது குறள்.

குழந்தைகள் பெற்றோருக்கு தரும் இன்பத்திற்கு இணையே இல்லை.  “குழந்தை பெறுவதால் வம்சம் தழைக்கும்”, “பிற்காலத்தில் ஆதரவு இருக்கும்” என்று கூறியிருந்தாலும் திருக்குறளின் மேன்மைக்கு பங்கம் ஒன்றும் இருந்திருக்காது.  ஆனால் அவர்களால் வரும் இன்பத்தை குறித்து பாடுவதன் மூலம் வள்ளுவர் குழந்தைகளை ஏன் ‘செல்வம்’ என்று கூற வேண்டும் என்று அழகாய் உணர்த்துகிறார்.

காதலர்கள் எல்லோரும் கலவியை தாங்கள் மட்டும் கண்டுபிடித்ததாக எண்ணுவதும், பெற்றோர் தம் குழந்தைதான் உலகிற்ச்சிறந்த குழந்தை என்று எண்ணுவதும் இயற்கையே.  இந்த பாசம், தம் மகவு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக அருவருப்பை மீறி அசிங்கத்தை அழகென ருசிக்கும் படி செய்து விடுகிறது.   மாற்றான் குழந்தையாய் இருந்தால், அசிங்கம் மட்டுமே தெரியும்!

நான் அறிந்த வரையில் உலக இலக்கியத்தில் குழந்தைகளை இவ்வளவு கொண்டாடுவது இந்திய  இலக்கியம் மட்டுமே.  ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு பருவத்தையும் இவ்வளவு நுணுக்கமாய் இரசித்து அனுபவித்து எழுதுபவர்கள் நாமே!  இவ்வளவு இரசித்த குழந்தையை, சற்று நேரம் கழித்து அவ்வளவு கொடுமையாய் பள்ளியில் சிறகு ஒடிப்பதை நினைத்தால் தான் வருத்தம் வருகிறது.

73/1330

Tags: அறத்துப்பால், இல்லறவியல், புதல்வரைப் பெறுதல், Spiritual Matters, Domesticity, Children, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
Blog link: http://kftd.blogspot.in/

Tuesday, September 11, 2012

1253: Loving you is a reflex – என்னை மீறிய வேட்கை



மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
     
1253   காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்
            Sensual Matters, Marital Love, Losing Control

Maraippenmann kaamaththai yano kurippindrith
Thummalpol thondri vidum






“Propriety demands that I hide my lust. However it is beyond my voluntary control and, like a sneeze, bursts out without warning” says the woman, quite helplessly, in this kural.

Civilization is an ongoing struggle between desire and postponement of its fulfilment.  Yearning, especially in a woman, is typically expected to be expressed in private in most cultures.  By its very nature, lust breaks erases any veneer of control.  This chapter, niraiyazhithal, talks about losing control in a social sense.

Of all the bodily reflexes, a sneeze is the most involuntary.  When you gotta sneeze, you gotta sneeze!  Using that as a metaphor for lust breaking down a woman’s sense of decorum aptly conveys the extent of her yearning and her helplessness in fulfilling it.

The setting for the chapter is the nayaki expressing her helplessness in her desire to her friend.  I am astounded by the culture where such a topic is discussed so casually and explicitly.  This chapter and the others in the Thirukural clearly demonstrate the equality between the sexes, the mutual esteem, the fairness of the social norms, the permissiveness and the deep understanding of natural urges.  This is not unique to the Tamils.  I have seen this repeated in multiple English readings of other language literature.

The “Valentines Day” goons should actually understand what their culture is before going around beating up lovers in the name of “defending” it!

என்னுடைய காம வேட்கையை நாணம் கருதி அடக்கவே முயல்கிறேன் நான்.  ஆனால் அது, ஒரு தும்மல்போல் என்னுடைய ஆளுமைக்கு உட்படாமல் ஒரு அறிவிப்பும் இல்லாமல் பீறி வெளிப்பட்டு விடுகிறது” என்று தலைவியின் ஆற்றாமையை வெளியிடுகிறது இந்தக் குறள்.

நாகரிகம் என்பது இறுதியில் ஆசைகளை அடக்குவதே.  பெரும்பாலான கலாச்சாரங்களில் வேட்கை தனிமையிலேதான் வெளிபடுத்தப்படவேண்டும் என்பது முறை.  அந்த முறை முறிக்கபடுவதே இந்த அதிகாரத்தின் சாரம்.

உடலின் தனிச்சையான செயல்பாடுகளில் தும்மல் முதல் இடம் பெறுகிறது – அதை அடக்குவது மிக கடினம் ஏனெனில் அது முன்னறிவிற்பின்றி தோன்றிவிடும்.  காமத்தின் பிடியில் உள்ளவர்களுக்கு அவர்களின் வேட்கை பீறிட்டு வெளிப்படுவதை தும்மலை உவமையாக காட்டுவதன் மூலம் வள்ளுவர் அதன் வேகத்தையும், அடக்க முடியாத குணத்தையும் எளிதாக வெளிப்படுத்துகிறார்.

இந்த குறளும், இந்த அதிகாரமும் இந்திய கலாசாரத்தின் ஆழத்தை தெளிவாக அடிக்கொடிடுகின்றன.  இத்தகைய கருத்து இவ்வளவு சாதாரணமாக விவாதிக்கப் படுகிறது  என்றால், அந்த கலாசாரத்தில் ஆண்-பெண் இரு சாராருக்கும் உள்ள சமத்துவத்தையும், உடல்-மனம் சார்ந்த உந்துதல்களைப் பற்றிய சீரிய அறிவும் ஆழ்ந்த தெளிவும் புலப்படுகின்றன.  தமிழில் மட்டுமில்லை, நான் இந்தியாவின் மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்துள்ளேன், எல்லா மொழிகளிலும் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதைப் பார்த்தால், நாம் எவ்வளவு பின்னடைந்துள்ளோம் என்று வருந்தத்தோன்றுகிறது.  காதலர் தினத்தன்று “நம் கலாச்சாரத்தை காக்கிறோம்” என்று கூறிக் கொண்டு காதலர்களை  துன்புறுத்தும் குண்டர்கள் கூட்டம் சற்று நம் கலாச்சாரம்தான் என்ன புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.

72/1330


Tags: காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல், Sensual Matters, Marital Love, Losing Control, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Sunday, September 9, 2012

510: When Does Selection Stop? – தேர்வு முடிவது எப்போது?

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
     
510   பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்
            Spiritual Matters, Governance, Recruitment

Theraan thelivunth thelinthaankann aiyuravum
Theera idumbai tharum






“தகுதி இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்தல், தீர ஆராய்ந்து ஒருவரை “தகுதியானவர்தான்” என்று நிர்ணயித்து தேர்ந்தெடுத்து அதன்பின் அவரை நம்பாமல் சந்தேகப்படுவது, இரண்டுமே தீராத கஷ்டத்தை தரும்” என்று தேர்வுக்கு ஒரு முடிவு வகுக்கிறது குறள்.

எந்த செயலையும் செவ்வனே செய்து முடிக்க ஒரு குழு தேவைப்படும்.  அந்தக்குழுவில் பல்வேறு விதமான ஆற்றல் கொண்டவர்களை தலைவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அவர்களை தேர்ந்தெடுக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய நியமங்களை விவரிக்கும் அதிகாரம் இது.

திருக்குறளில் பல்வேறு இடங்களில் இழையோடும் உணர்ச்சி இது – முடிவெடுத்தபின் குழம்பாமல் செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் வள்ளுவர்.  இந்த அதிகாரத்தில் எப்படி ஒருவரை சோதிப்பது, அப்படியெல்லாம் சோதனை செய்யும் போது நிதானத்தையும், நடுநிலையையும், ஆராய்ச்சி  நோக்கையும் கைவிடாது இருப்பதன் அவசியம் இவற்றையெல்லாம்  வலியுறுத்துகிறார் வள்ளுவர்.  இதன் மூலம் ஒரு வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பதில் உள்ள முயற்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். 

இப்படியெல்லாம்  சோதனை செய்து தேர்ந்தெடுக்கபட்டவர் தனது வேலையை செய்யும்போது அவர்மேல் முழு நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அவருக்கு உற்சாகம் குன்றும்.  அதனால் அவரது உற்பத்தி குறையும்.  இதனால் தலைவருக்கு அவர் மேல் நம்பிக்கை இன்னும் குறையும்.  அதனால் ... இந்த சுழற்சிக்கு முடிவே இல்லை.  இதை ஆங்கிலத்தில் “self fulfilling prophesy” என்று கூறுவார்கள்.   

சில வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க பள்ளியில் நடந்த ஆராய்ச்சியை இங்கே கூறுவது பொருந்தும்: ஆராய்ச்சியாளர் தான் இயற்றிய ஒரு சிறிய தேர்வின் மூலம் ஒரு வகுப்பில் எந்த குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள் என்று தன்னால் நிர்ணயிக்க முடியும் என்றார், இதை சோதிக்க பல வகுப்புகளில் தேர்வு நடத்தி தலா  இரண்டு மாணவர்களை “இவர்களே சிறப்பாக படிப்பார்கள்” என்று உறுதியாக கூறினார்.  என்ன அதிசயம்?  அவர் தேர்வு செய்த இரண்டு மாணவர்களே 90 சதவிகிததிற்கு மேலாக சிறப்பாக படித்தார்கள். வகுப்பில் முதன்மையாக வந்தார்கள். இது இந்த தேர்விற்கு முன் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருந்தாலும் சரியாகவே இருந்தது.   எப்படி பதினைந்து கேள்விகள் கொண்ட தேர்வு மூலம் இவ்வளவு சரியாக சிறப்பான மாணவர்களை அடையாளம் காண முடிந்தது என்று வகுப்பு ஆசிரியர்கள் கேட்ட போது உண்மை வெளியானது – எல்லா வகுப்புகளிலும் ஆராய்ச்சியாளர் மாணவர்களை கண்போன போக்கில் (random) தேர்ந்தெடுத்தார் அவரது தேர்வு ஒரு கண் துடைப்பே.  மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு ஆசிரியர்களின் எதிர்பார்ப்பே காரணம்! (http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect) அதேபோல், சந்தேக கண்கொண்டு பார்த்தால், நல்ல மாணவரும் சரியாக செயல்பட முடியாமல் போகும்.

வள்ளுவரின் குறளும் இதையே நிலைநிறுத்துகிறது.

Selecting an unqualified person and not fully trusting a qualified person who has been properly selected – both of these behaviours in a leader will lead to everlasting trouble” says this kural, identifying when the selection process should end.

In this chapter, therinthuthelithal, Valluvar outlines in some detail how to go about selecting people for an assignment.

The other couplets in this chapter talk about what are the considerations in selecting a person, what are the pitfalls, what to look for, what to discount and such like dimensions in the selection of a person.  This kural, the last, talks about the necessity for fully empowering the selected candidate, once he or she has cleared the intensive selection process.  (As an aside, I personally believe that the reversal of this attitude – selecting indiscriminately and weeding out people on ‘performance’ – is the root cause for most of the ills plaguing the Indian IT industry.  I also believe we are yet to see the worst effects of such a strategy.)

When the leader does not trust the person who is selected after vigorous qualification tests, it sets up a negative spiral. Since the candidate is, in a sense, gelded by the lack of trust, his output naturally suffers.  This reduced output reinforces the leader’s original mistrust leading to a vicious cycle.  This is what Valluvar refers to as “everlasting trouble”.

A few years ago, there was a very interesting experiment conducted by Rosenthal-Jacobson in US schools. They claimed to have refined a 15 item questionnaire that can predict the best performers in a class.  They were allowed to administer this questionnaire and they identified the students “most likely to perform well”.  Very surprisingly, over 90% of the identified students were the best or near the best of the students in their class, irrespective of their earlier performance. 

It turns out that the students most likely to perform well were selected randomly.  It was the teacher’s  expectations that the student will perform well that determined the student’s performance!  Similarly, it is not hard to think that a good student’s performance can be destroyed by the lack of trust of a student (For more information, please lookup Pygmalion Effect. http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect)

This kural too reiterates the same effect – if a leader thinks somebody will fail, they will certainly fail!

71/1330


Tags: பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல், Spiritual Matters, Governance, Recruitment, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/