Tuesday, June 12, 2012

1151: Go, if you have to – போக வேண்டுமென்றால் போ



செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
1151  காமத்துப்பால்- கற்பியல்- பிரிவாற்றாமை

Sellaamai undel yenakkurai matrunin
Valvaravu vaazhvaark kurai

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/kaamathu-paal/1151.mp3

பிரிவாற்றாமை பற்றி எழுதாத காவியமும் இல்லை, கலாச்சாரமும் இல்லை.  இந்த அதிகாரம் முற்றிலும் கணவன்-மனைவிகுள் உள்ள பிரிவு பற்றி மிகவும் இரசனையுடன் கூறப்பட்டுள்ளது.

“உன்னை விட்டு பிரியவே மாட்டேன்” என்று எனக்கு கூறுவதாயின் என்னிடம் சொல்லு.  அதை விட்டு விட்டு “போய்விட்டு விரைவில் வருகிறேன்” என்று சொல்லப் போவதானால், நீ வரும் போது யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களிடம் சொல்லு.  இதுதான் இந்த குறளின் பொருள்.

க்ஷண நேரமும் உன்னை பிரிவது எனக்கு நரகவேதனை தரும் என்பதை இப்படி மிகையாக கூறுகிறார் வள்ளுவர்.

பி.கு: பரிமேலழகர் உரை இதை தலைமைகளுக்கு தோழி கூறுவதாகக் கூறுகிறது.  அது எப்படி பொருந்தும் என்று எனக்கு புரியவில்லை.

Reams have been written in world literature about parting in every language and every culture.  The Thirukkural too talks about it; in this chapter, it talk about the pain of parting between a married couple from various dimensions.

The kural says “If you are will never leave my side, then tell me. If you, on the other hand, are going to tell me that you will return in a very short time, then tell that to whoever is alive when you come back”.  There is no indication as to who is saying this to whom but to me it looks like this is being said by the man to the woman.


Image courtesy: http://chestofbooks.com/food/household/Woman-Encyclopaedia-2/5-Love-Scenes-In-Pictures.html

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Sensuality, Parting, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை

Blog link: http://kftd.blogspot.in/

26/1330

No comments:

Post a Comment