Wednesday, June 13, 2012

454: Company is important– நண்பர்கள்


மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
454      பொருட்பால்- அரசியல்- சிற்றினஞ்சேராமை
Management - Politics - Avoiding bad company

Manathu lathupolak kaati oruvar
Kinathula thaagum arivu

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/454.mp3

நம் சுற்றம் நமது செயல்கள் மீது பெரும் தாக்கம் உடையது.  அதிலும் ஒரு அரசனைப்போல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது சுற்றத்தின் மூலமே தகவல் சேகரிப்பும் செயல் பாடும் நடைபெறுகின்றன.  எனவே, தக்க நபர்களோடு சேர்தலும், தகாதவர்களோடு சேராதிருதலும் மிகவும் அவசியமாகிறது. இந்த அதிகாரத்தில், வள்ளுவர் பின்னது பற்றி கூறுகிறார்.

குறள் கூறுவது, “ஒருவனுடைய பிரத்யேகமான அறிவு முதல் நோக்கில் அவனது மனதிலிருந்து வெளிபடுவது போல தோன்றினாலும், உண்மையாக ஆராய்ந்தால் அவனது இனத்திலிருந்தே தோன்றுகிறது என்று தெளிவாகும்”, என்பதே.

இந்த குறளை சற்று ஆழ்ந்து நோக்க வேண்டும் என்று படுகிறது.  இதை மேலெழுந்தவாரியாக பார்த்தால் அறிவு சுற்றத்தாரால் உண்டாவது என்பதுபோல் இருக்கிறது.  வள்ளுவர் இதை ‘சிற்றினஞ்சேராமை’ எனும் அதிகாரத்தில் கூறுவதால், இதன் அர்த்தம் சற்றே மாறுபடுகிறது என்று தோன்றுகிறது.  ‘சிற்றினம்’ என்றால், “நல்லது’ “தீயது” என்று பாகுபடுத்தாதவர்கள், காமுகர்கள், பாசாங்கு செய்பவர்கள், கபடதாரிகள் போன்றோர் ஆவர் என்கிறார் பரிமேலழகர்.  இதையும் சேர்த்து பார்த்தால், “நல்ல அறிவும் ஞானமும் இருந்தாலும், அது வெளிப்படும் போது நம் சுற்றத்தாரின் தாக்கம் கொண்டு அதற்கு ஏற்றவாறு மாறும்” என பொருள் கொள்ளலாம். நம் அறிவு நமது வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களாலும், நம்மை பாதிக்கும் கொள்கைகளாலும், நமக்கு முன்னுதாரணமாக இருப்பவர்களாலும் உருவாக்க படுகிறது என்பது மறுக்கமுடியாதது.  எனவே, நமது சுற்றம் பழுதாய் இருந்தால், நமது அறிவும் திரிந்துவிடும் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

For anybody in a position of authority, like a king, the quality people who are in daily contact with her, like the support staff and subordinates, is of utmost importance.  Information gathering and delegation of authority and decisions necessarily go through these layers of people.  Hence it is important for the person in authority to ensure that the people surrounding her are qualified and have the correct value systems.  It is probably more important to ensure that the wrong person is not in the entourage.  This chapter in the Thirukkural, sitrinamseraamai, talks about not a king associating with the wrong crowd.

“While it appears that a person’s specific knowledge and insight is innate, a deeper, truer analysis reveals that it is a product of his environment & the company he keeps” – this is the meaning of the kural.

While Valluvar seems to be deciding on the side of nurture in the age-old debate, I think it is important to consider the context of the kural – it is in a chapter that cautions against the wrong company.  “Wrong Company” here is defined as people who are immature, superficial, people who fail to distinguish between right & wrong (worse, who don’t care about it), lustful individuals etc.  So, clearly it is a set of people whose value systems are wrong. 

Taking this into consideration, I think the kural means that while intelligence may be innate, it is moulded and given expression by our environment and hence is a product of the environment.  It is undeniable that our value systems and therefore our decisions are shaped by our life experiences, the philosophies that impact us and the people who we consider our role models.  Thus if these are of bad quality, our intelligence will also go bad.



Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, Politics, bad Company, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை

Blog link: http://kftd.blogspot.in/

27/1330

No comments:

Post a Comment