Wednesday, June 6, 2012

963: Dignity - மானம் காத்தல்.


பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
963       பொருட்பால்- குடியியல்- மானம்

Perukkathu vendum panidal siriya
Surukkathu vendum uyarvu


தனி மனிதனாக மட்டுமின்றி ஒரு குடிமகனாக எப்படி வாழ வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  மானம் என்பது இல்லையேல் ஒன்றும் இல்லை என்பது யாவரும் அறிந்ததே. 

இந்தக் குறளில் அவர் ஒரு படி மேலே போய் கண்ணியமாக வாழ்வது பற்றிக் கூறுகிறார்.  உயர்ச்சி வரும் போதும் உயர்வாய் இருக்கும் போதும், ஒருவன் பணிவாய் இருத்தல் வேண்டும்.  அனால், வறுமையோ சற்றே சறுக்கமமோ வரும் காலத்தில், இழிவாக நடக்காமல், விட்டுக் கொடுக்காமல் உயர்வாக நடந்துகொள்ள வேண்டும்.  வறுமை, அல்பதனதிற்கு அனுமதி அளிப்பதில்லை.  நடத்தையில் பயமோ, திகைப்போ, தயக்கமோ இல்லாமல், முன்பை போலவே கௌரவமாக இருத்தல் வேண்டும்.

ஒருவனுடைய நடத்தை அவனிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை பொறுத்து இல்லாமல், அவனுடைய கொள்கைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.


The Thirukkural does not just advise kings and ministers on their behavior and responsibilities.  It clearly specifies what is expected of a citizen functioning as a part of the society too.  (Of course, there are entire chapters dedicated to how an individual should behave.)

This section talks about how to live with honour (Maanam) and this kural talks specifically about one’s conduct in times of prosperity and otherwise. 
It says, “During times of prosperity, a man should comport himself humbly and without any airs. When poverty strikes, a man should behave without compromising his dignity.”

Essentially, one’s deportment should not be affected by one’s financial status but should be governed by one’s principles.

(Image courtesy: http://fineartamerica.com/featured/dignity-tim-johnson.html)

20/1330

No comments:

Post a Comment