Friday, August 31, 2012

202: Why you should fear evil – தீயவை கண்டு ஏன் அஞ்சவேண்டும்?


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
     
202   அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்
            Spiritual Matters, Domesticity, Fearing Evil

Theeyavai theeya payathalaal theeyavai
Theeyinum anjapp padum.






“தீமை செய்வது தீமை செய்பவற்கே கெடுதல் விளைவிப்பதால் தீயவைகள் தீயை விட தீங்கிழைபவையாக அஞ்சப்பட வேண்டும்” என்று தீமை செய்வதில் உள்ள அபாயத்தை உணர்த்துகிறது குறள்.

நல்ல நெறி என்பது வாழ்கை நடத்த ஒரு அச்சாணி போன்றது.  நல்லதை விழைந்து, தீமையை ஒதுக்கினால் மட்டும் போதாது.  தீய செயல்களை செய்ய அஞ்ச வேண்டும் என்று உணர்த்தும் அதிகாரம் இது.

நான் பார்த்த வரையில் “ஏன் தீயவை செய்யக் கூடாது?” என்ற கேள்விக்கு பொதுவான பதில், “உம்மாச்சி கண்ணைக் குத்தும்!” என்றோ, “நீதிக்கு புறம்பானது” என்றோ, புற விளைவுகளை மையமாகக் கொண்டே இருக்கும்.  ஆனால், இந்த குறளில் உள்ள “தீமை உனக்கே தீமை விளைவிக்கும்” என்ற கருத்து தீமையின் தன்மையையை சுயநல ரீதியில் விளக்குகிறது. 

இந்த வாதத்திற்கு வீர்யம் அதிகம்!  தன்னலம் காத்தல் எல்லா உயிரினங்களுக்கும் உள்ள ஆதார உணர்ச்சி.  மனநிலை சரியில்லாத ஒருவர்கூட தன்னை காத்துக்கொள்ள தவறுவதில்லை.  அதை முன்னிலைப் படுத்துவதால் தீமையின் விளைவுகளுக்கு ஒரு அவசரம், நெருக்கம் வருகிறது.

தீமை செய்தால் எப்படி நமக்கே தீமை விளையும்?  இதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன – இப்பிறவியில் செய்யும் தீமை வரும் பிறவிகளில் நம்மை பிணிக்கும்; அதனால் நாம் வாழ்க்கைச் சுழலிலிருந்து மீள்வது கடினமாகிவிடும்.  இரண்டாவது விளக்கம், தீய வழியில் நடப்பதால் நல்ல இலாபம் கிடைப்பது போல் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் நிம்மதி போய், அஞ்சி அஞ்சி வாழ வேண்டி வரும்.  அந்தக் கொடுமையை காட்டிலும் தீய வழி நடக்காதிருப்பதே மேல்.  முந்தையதை விட பிந்தைய விளக்கதிற்கு தாக்கம் அதிகம் என்று எனக்கு தோன்றுகிறது.  இதற்கு எந்த மத சார்பான நம்பிக்கையும் தேவையில்லை.

அதனாலேயே எனக்கு இந்த குறள் பிடித்திருக்கிறது.

Evil deeds ultimately result in harming the doer and therefore need to be feared as more harmful than an uncontrolled fire” cautions this kural on the effects of doing evil.

A well developed sense of morality is essential to living life meaningfully in society.  It is not sufficient to know right from wrong.  This chapter, theevinaiyachcham, requires that one actively fear committing evil deeds.

Most catechisms answer the question “Why should I not commit evil, when the benefits are so obvious and immediate?” from an extraneous perspective. Typical answers are that “God will punish you”, “It is illegal.” Etc.   This kural, however, attempts to bring home the effect of the evil to the doer as a personal danger.  Self preservation is a basic drive in all living things.  By appealing to it, the kural brings immediacy and urgency to the argument.

How does evil harm the doer himself?  That question can be answered from two perspectives – one, it jeopardizes your chances of nirvana as your evil account goes into surplus.  This argument, of course, presupposes a belief in karma and a yearning for nirvana.

The other argument, requires a slightly long term outlook but does not require any special religious orientation.  When an evil deed is committed, the benefits are real but over time, it costs us our peace of mind.  The doer is worried about repercussions every waking minute and has to constantly strive to protect against them.  That loss of peace of mind makes it very costly to commit evil and hence it should be avoided.

I think kural’s attempt to make the consequences immediate & personal makes it powerful.

70/1330


Tags: அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம், Spiritual Matters, Domesticity, Fearing Evil, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

No comments:

Post a Comment