புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
1267 காமத்துப்பால்- கற்பியல்- அவர்வயின்விதும்பல்
Sexuality – Post Marital Love –
Passion of reuniting
Pulappenkol pulluven kollo kalappenkol
Kannanna kelir varin
“நெடு
நாள் பிரிந்திருந்த என் கண்ணை போன்ற கணவர் வந்தால், என்னை பிரிந்திருந்ததற்காக
ஊடல் செய்வேனா? அல்லது, அல்லது, ஏன் பிரிவாற்றாமையை தணிக்க அவரை கட்டித்
தாழுவுவேனா? அல்லது, வேட்கையினால்
இரண்டையும் கலந்து கூடுவேனா?’ என்று குழம்பி தவிக்கிறது குறள். (சிலர் இதை,” ஊடல், கட்டிபிடிதல் என்ற
இரண்டையும் கலந்து செய்வேனா” என்றும் விரிவுரைப்பர்.)
அன்றாட
வாழ்கையில் சாதாரண நிகழ்ச்சிகளில் உள்ள காதலை வெளிக்கொணர்வதில் குறளுக்கு
இணையில்லை. நான் படித்த ஆங்கில இலக்கியங்களில்
காதலன்-காதலி பிரிவதும் பின்பு கூடுவதும் பெரிய நிகழ்ச்சிகளாய் வருகின்றதே ஒழிய, சமைக்கும்
போது ஒரு மின்னல் பார்வையில் மிளிரும் காதலை பற்றி கவி பாடியவர்கள் மிகவும்
குறைவு. காமத்துப்பாலில் எனக்கு பிடித்த
அம்சம் இதுவே!
இதில்
கீரிடம் வைத்ததுபோல் இருப்பது, இந்த உணர்ச்சிகளுக்கு தனியான வார்த்தைகள் இருப்பதே. இது போன்ற நுண்மையான உணர்ச்சிகளுக்கு தனியான
வார்த்தைகள் தேவை பட்டால், அந்த நாகரிகம் எவ்வளவு ஆழமாய் உணர்ச்சிகளை
அனுபவித்திருக்க வேண்டும்? ஆச்சர்யம்
தரும் விஷயம் இது.
(அவர்வயின்விதும்பல் = பிரிந்தவர்
கூட தவிக்கும் ஆசை; கேளிர் = உறவினர்; விதுப்பு = ஆவல், விரைதல்; புலவி = ஊடல்)
There is always a conflict when a couple who
been apart for some time meet. There is
so much to talk about, there is the physical need to assuage and there is also
an underlying resentment at the parting.
(In this we are all children!) This
chapter, avarvaiyinvithumbal, talks about the desire that parting induces which
makes the couple hurry towards each other.
“My dear husband who has been long parted from me is coming. When he comes would I have a tiff with him
for having deserted me for this long? Or would I hug him to my bosom? Or, overcome
by my desire, would I mix both and have intercourse with him?” says the
confused wife in this kural. (Some scholars interpret this as “Will I mix both,
hugging and quarreling with him at the same time?”. I feel the former interpretation is more ‘true’
in the literary sense as Huxley once espoused.)
Most of my delight in reading the sexuality
divisions of the Thirukkural stems from Valluvar’s masterly use of the ordinary
and the mundane to bring out the love between a husband and wife. Towering passion is all fine and dandy in the
initial portions of a relationship but a mature couple expresses love more
quietly and discreetly. The exploration
of this in the Thirukkural is beautiful and satisfying to me.
I am also astounded by the sensitivity of the
culture will required and used words for such fine actions and emotions.
39/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Post
Marital Love, Passion of reuniting, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், காமத்துப்பால்,
கற்பியல், அவர்வயின்விதும்பல்
No comments:
Post a Comment