Showing posts with label Sexuality. Show all posts
Showing posts with label Sexuality. Show all posts

Thursday, August 2, 2012

1276: The Signal in the sex - கூடலில் உள்ள குறிப்பு


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து

1276   காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்
Sexuality, Post Marital Love, Signalling

Perithaatrip petppak kalathal arithaatri
Anbinmai soozhva thudaithu







இவர் என்னை பிரிந்து விடும் துன்பம் எனக்கு வருவது மிகவும் அரிது என்று எண்ணி இருந்தேன். ஆனால்  இப்படி என்னை பெரிதும் மகிழ்விக்குமாறு கூடுகிறாரே இவர்?  சீக்கிரமே பிரியப் போவதால் தானோ?  அப்படியென்றால், இது இவருக்கு அன்பில்லாமையை தானே குறிப்புணர்த்துகிறது?” என்று தலைவி அதிகமாய் ஆராய்வதாக உள்ளது குறள்.

கணவன்-மனைவியிடையே பேச்சால் வளரும் உறவைவிட குறிப்பால் வளரும் உறவே அதிகம்.  அப்படியிருக்கையில், குறிப்பு உணர்துதலும், உணர்தலும் எவ்வளவு முக்கியம் என்று விளக்கும் அதிகாரம் இது.

இந்தக் குறளுக்கு என் விளக்கம் சரிதானா என்று எனக்கு சந்தேகமாய் உள்ளது. வார்த்தைகள் புரிந்தாலும், குறளின் உள்ளர்த்தம் என்ன என்று எனக்கு தெளிவாகவில்லை. என் சந்தேகம் என்னவென்றால், கூடுதலில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தலமைகள்  தலைவன் பிரியபோகிறான் என்று குறிப்பறிந்து கொள்கிறாளா அல்லது, மகிழ்ச்சி மிகுதியால் வீணே கவலைப் படுகிறாளா? 

(இதற்கு மூன்றாவதாய் ஒரு விளக்கமும் உள்ளது: “இந்தக் கூடலின் மகிழ்ச்சியால், இதற்கு முன் இவர் அன்பில்லாமையால் வந்த பிரிவுத்துயரத்தை தாங்கிக்கொள்ள முடிகிறது” என்பதே.  ஆனால், அதில் ‘குறிப்பு’ இல்லாததால், நான் ஏற்கவில்லை.) 

தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்கள்.

(பெட்பு = விருப்பம்)

I always thought that the pain of separation will be rare with this man.  Now, he has raised my joy in this act of union to such peaks, I fear that it is an indication that he is soon going to part from me.  If so, this ecstasy is only an indication of his fundamental lack of love for me” says the suspicious wife, of the signal implicit in the great sex with her husband.

A married couple’s relationship is built more on signals that evolve over time rather on than on mere verbal communication. This chapter, kuripparivuruthal, talks about such signalling between couples.

While I understand the words of this kural, I am not able to gauge the mood behind them.  I am not sure if the kural is about a signal correctly received by the wife about the impending parting based on the sheer intensity & ecstasy in the love making. Or if she is perceiving a false signal from the husband just because the love making is so great. 

(There is a third  interpretation: “The heights achieved by this act of union enable me forget the pain caused by the parting which was a direct result of his lovelessness”.  However, since there is no signalling in that, I reject it.)

I would be glad to be guided by anybody who knows.

64/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Post Marital Love, Signalling, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்

Blog link: http://kftd.blogspot.in/

Friday, July 27, 2012

1281: Difference between beer and the bed - கள்ளை விட காமம் மேலானது


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

1281    காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்
Sexuality, Marital Love, Longing for Love

Ullak kaliththalum kaana magizhthalum
Kallukkuil kaamathirk kundu






“கள்ளின் இன்பம் பெரிது என்று கூறும் குடிகாரர்கள் முட்டாள்கள்.  கள்ளை குடித்தால்தான் இன்பம்.  காமதிலோ, கூடினால் மட்டும்தான் இன்பம் என்றில்லை.  மனதால் நினைத்தாலும் மகிழ்ச்சி, கண்ணால் கண்டாலும் களிப்பு.” என்று காமத்தின் மேன்மையை தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது குறள்.

கணவனும் மனைவியும் ஆழ்ந்த காதலால் கூடலுக்கு ஏங்கும் தன்மையை விளக்கும் அதிகாரம் இது.  குறிப்பாக இந்தக் குறள், பிரிந்து போகும் தலைவனுடன் ஏன் கூட வில்லை என்று தோழி கேலி செய்யும் போது அதற்கு தலைவி கூறும் பதிலாக அமைந்துள்ளது.

பிரிவதையும் கூடுவதையும் விரசமின்றி, இரசனையுடன் காமத்துப்பாலில் வள்ளுவர் எழுதியுள்ளார்.  விரசமில்லாமல், கடைநிலை இரசனையை தாண்டி எழுதத் தெரியாதவர்களெல்லாம் ‘கவிப் பேரரசு’ என்று கூறிக் கொண்டு அலைவது சிரிப்பை வரவழிக்கிறது!

இந்தக் குறளில் கவனிக்க வேண்டியது புலவரின் சொற் பிரயோகமே – ‘களிப்பு’ என்று கூறுவதால் அது உணர்வு அழியாத இரசிப்பு என்று உணர்த்துகிறார். ‘மகிழ்ச்சி’ என்றால் ஒரு படி மேலே சென்று உள்ளத்திலிருந்து தனிச்சையாக வரும் உவகையை குறியீட்டுகிறார்.  இரண்டுமே தன்னிலை தவறாமல் அறிவார்த்தமாக இரசிக்கும் நிலை.  குடியில் உள்ள இன்பம் அறிவழிந்து, நிலை தவறுவதால் வரும் சிற்றின்பம்.    இது, அது இல்லை என்று இந்தச் சொற்க்களை தேர்ந்தேடுத்ததால் சொல்கிறார் வள்ளுவர்.

(புணர்ச்சி =கூடல், கலவி; விதும்பல் = ஏக்கம்)
பி.கு: 3-4 நாட்கள் குறள் பற்றி எழுதாததற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  என்னால் வலை தளத்தை அணுக முடியவில்லை.


Those that claim that alcohol is the ultimate pleasure are fools.  The pleasure in it is only experienced when drinking.  Sex is infinitely better.  You can enjoy the act and later relive it just by thinking about it.  In fact, merely seeing one’s beloved can make us experience the pleasure once again” says the kural, making a very strong case for why sex is better than alcohol.

The context of the kural is as an answer by the woman to her friend, who teases her for not making love to her husband who is departing.  The Thirukkural talks about the mutual yearning of a married couple to make love in this chapter, punarchchivithumbal.  Valluvar writes beautifully and tastefully about all the sensual aspects of a couple in his epic.

While it is beyond my meagre skills to convey in another language the depth of meaning that the bard loads into the verse by his mere choice of words, the enjoyment of this kural is greatly enhanced if one appreciates it. I will try to the best of my abilities …

Valluvar uses ‘kalippu’ (joy) and ‘magizhchi’ (happiness) to denote the pleasure felt in thinking about and seeing one’s beloved.   Both words indicate a pleasure that is experienced rationally and cognitively.  A drunk’s pleasure, on the other hand, depends on losing oneself and the absence of rational thought.  Therefore, by choosing the words that he does for talking about the pleasure in the longing for love and not for the drunken stupor, he clearly places it above the latter and underlines the baseness of alcohol induced joy.

PS: Apologies for the 3-4 day stoppage of KFTD; my ISP decided that I am on the internet too much!

62/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Marital Love, Longing for Love, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்

Blog link: http://kftd.blogspot.in/

Monday, July 23, 2012

1148: How to kill a love - காதலை கொல்வது எப்படி


நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

1148    காமத்துப்பால், களவியல்,   அலரறிவுறுத்தல்
Sexuality, Pre-Marital Love, Scandalous Affair

Neiyaal yerinuthuppEm yendratraal kavvaiyaal
Kaamam nuthuppEn yenal






நம் காதலைப் பற்றி பழித்து பேசுவதால் அது அழிந்து விடும் என்று ஊரார் நினைப்பது எரியும் தீயை நெய் ஊற்றி அணைக்க எண்ணுவது போலாகும்” என்று காதல் புகழ் பாடுகிறது குறள்.

மணமாவதற்க்கு முன் காதலில் உள்ள சுவையும் பிரச்சினைகளும் தனி வகையானவை.  அதுவும் நமது கலாசாரத்தில் இது ஒரு வகையான போராட்டமாகிறது.  பிறர் பேசுவதால் அந்தரங்கமான  உணர்வுகளும் உறவுகளும் பகிரங்கமாகின்றன. அச்சம், மடம், நாணம், போன்ற உணர்ச்சிகளால் இந்த நிலை பலர் அறிய இருப்பது தாங்கமுடியாததாகிறது.  இந்த நிலையை வருணிக்கும் அதிகாரமே அலரறிவுறுத்தல்.

இந்தக் குறளில் உள்ள எதார்த்தம் என்னை மிகவும் கவருகின்றது.  காதலித்தால் அதை பற்றி ஊர் வம்பு பேசுவது இயற்கை.  அந்தப் பேச்சினால் காதலர்களின் பிடிவாதமும், காதலும் கூடுவது எதிர்பார்க்ககூடியதே.  இதை நெய்யூற்றி தீயை அணைப்பதுடன் ஒப்பிட்டு இதில் உள்ள அர்த்தத்தின் ஆழத்தை எளிதாய் வெளியிடுகிறார் வள்ளுவர்.

(அலர் = ஒருத்தி ஒருத்தனைக் காதலிப்பதறிந்து ஊரார் இருவரையும் பழித்துக் கூறல்; கெளவை = வெளிப்படல், பழிச்சொல்; நுதுத்தல் = அழித்தல்)

If the others think that our love will wilt because of their malicious gossip, they should understand it is akin to dousing a fire with ghee” exult the lovers in this kural.

Lovers in any culture go through an emotional roller coaster before their love is culminated in marriage. As long as it is not scandalous gossip does not hurt two people in love in other cultures.  Our culture offers additional dimensions of problems to the lovers – gossip about a couple’s love makes public a very private emotion and relationship.  The natural shyness of the woman makes it unbearable that it is overt.  This chapter, aralarivuruthal, talks about the effects of such gossip on the couple and their love. (The fact I could not find any image on google to convey the concept ( no doubt due to my inadequate search skills) shows how alien this concept is to the West)

I particularly like the naturalness of this kural.  People gossiping about lovers is very common. The very fact that their love is public and is the subject of gossip increases the lover’s resolve to just go on loving. This is essential psychology – that which is forbidden becomes more attractive.  Comparing it to an attempt to douse a fire with fuel shows the effect of such efforts effortlessly.

61/1330

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Pre-Marital Love, Scandalous Affair, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால்களவியல், அலரறிவுறுத்தல்

Saturday, July 14, 2012

1239: Instant Effects – க்ஷண நேரப் பிரிவுகள்


முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

1239   காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்
            Sexuality, Marital Love, Atrophying Organs

Muyakkidaith thannvali pozhap pasappatra
Pedai perumazhaik kann





“ஆரத் தழுவிகொண்டிருக்கும் போது ஊடே குளிர்க்காற்று புகுந்தது.  அந்தச் சிறு பிரிவையும் தாங்க முடியாமல் அவள் கண்கள் நிறம் மாறி பெரு மழையாய் கண்ணிர் வடிக்கின்றன” என்று அழகாய் வருணிக்கிறார் வள்ளுவர்.

பிரிவினால் வரும் மன உளச்சலை பற்றி பலரும் பாடியிருக்கின்றனர்.  ஆனால், வள்ளுவப்பெருமான் பிரிவால் உடல் அழகு குலைவதைப் பற்றி இந்த அதிகாரத்தில் பாடியிருக்கிறார்.

காதலின் தாக்கத்தை விளக்க சற்று மிகையாய் உவமை அளிப்பது  சகஜமாய் நடப்பதே.  இந்த குறளில் ஒரு செயலுக்கும் அதன் காரணதிற்க்கும் இருக்கும் கால இடைவெளி மூலமாக காதலின் நெருக்கத்தையும், பிரிவின் வலியையும் குறிப்பரிவிக்கிறார் புலவர். 

காற்றே புக முடியாத அளவிற்கு தழுவிக்கொண்டிருக்கிறார்களாம்; அவளுக்கு வலிக்குமே என்று காதலன் கொஞ்சம் நகர்ந்ததால் காற்று புகுந்துவிட்டதாம்.  அது குளிர் காற்றானதால் காதலி உணர்ந்துவிட்டாளாம்.  உடனே, அந்தக்ஷணமே பிரிவாற்றாமை தாக்கி, பசபுற்று கண்ணீர் வடிக்கிறாளாம்!

நடைமுறையில் நடக்காது என்றாலும், அதன் காரணத்தினாலேயே காதலின் ஆழமும், காதலியின் துயரமும் வெகு அழகாக நம் கண்முன் நிற்கின்றன.

(முயங்கு =தழுவு; போழ்தல் = பிளத்தல்; தண்வளி = குளிர் காற்று)

When we were entwined tightly in each other’s arms, a cool breeze sprung up and managed to come between us.  Unable to bear even such a small parting, my love’s eyes have lost luster and have filled up with tears  like from a rain” describes the lover in this kural.

World literature is rife with poems describing quite beautifully the mental trauma caused by separation.  Valluvar takes a different tack and describes the physical effects of parting, in this chapter, uruppunalamazhithal.

Any literature talking about love exaggerates.  In fact, the exaggeration counter-points the storm unleashed inside the lovers.  Valluvar uses the instantaneity of the physical reaction to underscore the love.

Just imagine:

The lovers are so entwined that there is no space for even air between them. Fearing that he is causing pain, the lover relaxes just a little bit, enabling the cool night air to get in between them.  That parting, instantaneously causes a physical reaction in his love – her eyes lose lustre and fill up with tears.

Sure it does not happen in reality.  It probably cannot happen.  But the very impossibility of the occurrence throws into relief the intensity of the passion and the pain that the lovers feel at parting.

54/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Marital Love, Atrophying Organs, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்


Blog link: http://kftd.blogspot.in/

Monday, June 25, 2012

1267: Love? Tiff? Both? - காதலா? ஊடலா?


புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
1267  காமத்துப்பால்- கற்பியல்- அவர்வயின்விதும்பல்
Sexuality – Post Marital Love – Passion of reuniting

Pulappenkol pulluven kollo kalappenkol
Kannanna kelir varin






பிரிந்திருந்த தலைவனும் தலைவியும் வேட்கை மிகுந்து ஒருவரையொருவர் காண விரைதலே இந்த அதிகாரத்தின் சாரம். 

“நெடு நாள் பிரிந்திருந்த என் கண்ணை போன்ற கணவர் வந்தால், என்னை பிரிந்திருந்ததற்காக ஊடல் செய்வேனா? அல்லது, அல்லது, ஏன் பிரிவாற்றாமையை தணிக்க அவரை கட்டித் தாழுவுவேனா?  அல்லது, வேட்கையினால் இரண்டையும் கலந்து கூடுவேனா?’ என்று குழம்பி தவிக்கிறது குறள்.  (சிலர் இதை,” ஊடல், கட்டிபிடிதல் என்ற இரண்டையும் கலந்து செய்வேனா” என்றும் விரிவுரைப்பர்.)

அன்றாட வாழ்கையில் சாதாரண நிகழ்ச்சிகளில் உள்ள காதலை வெளிக்கொணர்வதில் குறளுக்கு இணையில்லை.  நான் படித்த ஆங்கில இலக்கியங்களில் காதலன்-காதலி பிரிவதும் பின்பு கூடுவதும் பெரிய நிகழ்ச்சிகளாய் வருகின்றதே ஒழிய, சமைக்கும் போது ஒரு மின்னல் பார்வையில் மிளிரும் காதலை பற்றி கவி பாடியவர்கள் மிகவும் குறைவு.  காமத்துப்பாலில் எனக்கு பிடித்த அம்சம் இதுவே! 

இதில் கீரிடம் வைத்ததுபோல் இருப்பது, இந்த உணர்ச்சிகளுக்கு தனியான வார்த்தைகள் இருப்பதே.  இது போன்ற நுண்மையான உணர்ச்சிகளுக்கு தனியான வார்த்தைகள் தேவை பட்டால், அந்த நாகரிகம் எவ்வளவு ஆழமாய் உணர்ச்சிகளை அனுபவித்திருக்க வேண்டும்?  ஆச்சர்யம் தரும் விஷயம் இது.

(அவர்வயின்விதும்பல் =  பிரிந்தவர் கூட தவிக்கும் ஆசை; கேளிர் = உறவினர்; விதுப்பு = ஆவல், விரைதல்; புலவி = ஊடல்)

There is always a conflict when a couple who been apart for some time meet.  There is so much to talk about, there is the physical need to assuage and there is also an underlying resentment at the parting.  (In this we are all children!)  This chapter, avarvaiyinvithumbal, talks about the desire that parting induces which makes the couple hurry towards each other.

“My dear husband who has been long parted from me is coming.  When he comes would I have a tiff with him for having deserted me for this long? Or would I hug him to my bosom? Or, overcome by my desire, would I mix both and have intercourse with him?” says the confused wife in this kural. (Some scholars interpret this as “Will I mix both, hugging and quarreling with him at the same time?”.  I feel the former interpretation is more ‘true’ in the literary sense as Huxley once espoused.)  

Most of my delight in reading the sexuality divisions of the Thirukkural stems from Valluvar’s masterly use of the ordinary and the mundane to bring out the love between a husband and wife.  Towering passion is all fine and dandy in the initial portions of a relationship but a mature couple expresses love more quietly and discreetly.   The exploration of this in the Thirukkural is beautiful and satisfying to me. 

I am also astounded by the sensitivity of the culture will required and used words for such fine actions and emotions.

39/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Post Marital Love, Passion of reuniting,  குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்