தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
383 பொருட்பால்
– அரசியல்- இறைமாட்சி
Material Matters – Leadership – Nature of Kings
Thoongaamai kalvi thunivudaimai yimoondrum
Neenga nilanaal bavarkku

“விரைந்து
செயலாற்றுதல், அதற்கு தேவையான நுண் கல்வி, செயலாற்ற வேண்டிய மனதிட்பம் இவை
மூன்றும் ஒரு அரசனுக்கு அடையாள குணங்கள்.
இவை இல்லை என்றால் அரசனாக நீடிக்க முடியாது” என்று முதல் அடியை வைக்கிறார்
வள்ளுவர்.
இந்த
குறளில் இரண்டு விஷயங்கள் கவனிக்க தக்கவை: அரசனக்கு அடிப்படை தகுதிகளாக கல்வியும்
அதனால் வரும் அறிவும் கூறபட்டிருக்கின்றது.
இந்த அறிவை பயன்படுத்தி சட்டென்று முடிவெடுக்க தெரிய வேண்டும். காலம் தாழ்த்தினால் இலக்கை அடைய முடியாது. முடிவாக, எடுத்த முடிவை செயல் படுத்த மன உறுதி
வேண்டும். அறிவு இல்லாமல் மற்றவை
இருந்தால், தெளிவு இருக்காது. முடிவெடுக்க
தெரியவில்லை என்றால் ஆட்சி இலக்கற்றதாக இருக்கும். துணிவு இல்லையெனில், முன்னேற்றம் இருக்காது. இம்மூன்று இயல்புகள் தற்காலத்திலும் ஒரு மேலதிகாரிக்கு
தேவையாகவே இருக்கின்றன. குறளின் காலம் தாண்டிய
இயல்பு குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக,
பெரும்பான்மையான உரையாசிரியர்கள் இந்த குறளில் வரும் ‘துணிவு’ என்பதை ஆண்மை
என்றும், ‘தூங்காமை’ என்பதை விரைவான முடிவெடுத்தல் என்றும் விளக்கம் கூறியுள்ளனர். ஏன் என்று எனக்கு விளங்க வில்லை. நான் கூறிய விளக்கத்திலும் அர்த்தம் செரியாகவே
உள்ளது என்பது ஏன் தாழ்ந்த அபிப்ராயம். ‘தூங்காமை’
என்பதை ‘அயராத உழைப்பு’ என்று பொருள் கூறினாலும் விளக்கம் சரியாகவே இருக்கும்.
துணிவை ஆண்மை என்று கூறுவது காலத்தின் கட்டாயம் என்று கூறலாம். (மு.வ., பாப்பையா
போன்ற தற்கால அறிஞர்கள் இப்படி கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
(இறை
= அரசன்; மாட்சி = இயல்பு)
This section, Porutpaal, deals with material aspects of
day-to-day living in a kingdom. I have been unsatisfyingly translating this as ‘Management’
until now but I feel that ‘Material Matters’ conveys the import better, albeit
still imperfectly. A lot of the wisdom
in this section is still applicable contemporaneously, say in the running of a
large organization. In the governance of
a large organization, the leader’s role sets the tone for the entire
organization. This is why Valluvar dedicates 25 chapters to the what
constitutes a good king. Of these, the this,
the first chapter, iraimaatchi, talks about the characteristics of a king or
leader.
“Speedy decision making, knowledge founded on good education
and courage of conviction are the three most important requisites for a king”
says the kural. Of course, there are
other markers but these are the foundation.
Knowledge without decisiveness and courage is academic;
without knowledge, the other two are rudderless and without courage and strong
will, execution is impossible. It is notable that these characteristics span
the centuries and are still essential in leaders.
The kural says ‘thoongaamai’ which translates as ‘sleeplessness’
or ‘untiring labour’. Almost all
scholars have explained this as ‘decisiveness’.
I cannot reconcile this as the
willingness to work is as important as decisiveness. Probably for a leader, the bromide about
working smart versus working hard applies more?
Also, there is difference in the way another word has been interpreted
over the years. Earlier scholars talked
about ‘thunividamai’ (courage) as ‘manliness’.
Current scholars prefer the more literal courage. I attribute this to the times at which the
commentaries have been written.
36/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material
Matters, Leadership, Nature of Kings
, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், இறைமாட்சி
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment