Showing posts with label Material Matters. Show all posts
Showing posts with label Material Matters. Show all posts

Thursday, August 30, 2012

849: Identifying Idiots - அறிவற்றவனின் அடையாளம்


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

849   பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை
            Material Matters, Friendship, Stupidity

Kaanaathaan kaatuvaan thaankaanaan kaanaathaan
Kandaanaam thaankanda vaaru






அறிவற்ற ஒருவனுக்கு விஷயம் அறிந்தவன் அறிவுறுத்த நினைத்தால், அவனை முன்னவன் அறிவற்றவனாக நினைப்பான்.  மேலும், அறிவை காணாதவன், தான் அறிந்தது மட்டுமே அறிவு என்றும் எண்ணிக்கொள்வான்” என்று மோனையாக விளக்குகிறது குறள்.

நம் நண்பர்கள் அறிவாளிகளாய் இருக்க வேண்டும் என்பதில் வள்ளுவர் தெளிவாக இருக்கிறார்.  இதனால், முட்டாள்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வது அவசியமாகிறது.  அறிவற்றவர்களை அடையாளம் காண்பதெப்படி என்று விளக்கும் அதிகாரம் “புல்லறிவாண்மை”.

அறிவுறையை ஏற்று கொள்ள தன்னம்பிக்கை வேண்டும்.  சொல்லப் போனால் என் அனுபவத்தில், ஒரு வல்லுனரின் அடையாளமே “எனக்கு தெரியாது” என்று சொல்லக்கூடிய தைரியம் இருப்பதே.  அது இல்லாதவர்கள், புது விஷயங்களை எற்றுகொள்வதில்லை.  வளராமல், மாறாமல் இருப்பது அறிவு இல்லை – வெறும் அபிப்ராயமே. 

தம் அறிவை வளர்த்துக் கொள்ளாதவர்களிடம் நட்பு கொண்டால் நாளிடைவில் அது வெறுப்பில் முடியும்.  இதனால்தான் வள்ளுவர் அறிவிள்ளதவர்களிடம் நட்பு கூடாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

இந்தக் குறளில், சொல்வன்மை கவனிக்க தக்கது.  “காணுதல்” என்னும் சொற்றொடரை அறிவுக்கு குறிப்பாக பயன்படுத்துவதால், அறிவற்றவர்களின் குருட்டுத்தனமும் அழகாக வெளிப்படுகிறது, மோனையும் சிறப்பாக அமைகிறது.


“The mark of an idiot is his closed attitude – if an intelligent man tries to educate an idiot, the latter will disregard the advice and conversely, consider the former an idiot.  An idiot thinks only what he knows is knowledge and nothing else matters” asserts this alliterative kural.

Valluvar cautions against associating with stupid people, or even just intellectually inferior people, multiple times in the Thirukural.  It is therefore important to be able to identify stupid people.  This chapter, pullarivaanmai, talks about how to identify such idiots.

In my experience, the hallmark of an expert is his ability to say “I don’t know”.  Accepting one’s ignorance is the first step in acquiring knowledge.  It requires confidence in one’s own expertise and one’s ability to learn new things. (It also implies that what he does know, he knows well!).  An idiot, on the other hand, never accepts it, partially as a result of his fear of being exposed. 

Knowledge which does not change, grow, improve, which is static is not knowledge at all. It is merely dogma, at best an opinion.  A closed attitude therefore is a clear predictor of an idiot on the horizon.  This attitude is further manifested by the inability to accept as ‘knowledge’ anything outside the idiot’s ken.

Continued association with a person who simply refuses to augment his knowledge will, in time, lead to frustration.   Perhaps this is the reason Valluvar consistently cautions against associating with them.  Like the popular quote goes “Do not deal with the stupid , they drag you down to their level and beat you with experience”!

Valluvar uses “seeing” as a metaphor for intelligence in this kural.  This helps in the alliteration and more importantly, underlines the deliberate blindness of the stupid. 

69/1330

Image courtesy: http://www.sharenator.com/Stupid_people_things_and_stuff/#/stupid_bush1_Stupid_people_things_and_stuff-5.html  

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Stupidity, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Sunday, August 5, 2012

467: Look before you leap – நில்! யோசி! செய்!


எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
     
467   பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5
            Material Matters, Governance, Strategic Clarity

Yennith thuniga karumam thunithapin
Yennuva, yenbathu izhukku






நினைத்ததை முடிப்பதெப்படி என்று குறள் கூறும் வழி இது:

“ஒரு காரியத்தை தொடங்கும் முன்னே அதில் வெற்றி கொள்ள என்ன தேவை, அது நம்மால் முடியுமா, அதில் கிடைக்கும் ஊதியம் போதுமா, இது தேவைதானா என்று தீர யோசித்து, ஆராய்வன ஆராய்ந்து திட்டம் வகுக்க வேண்டும்.  செயல் தொடங்கிய பின் சந்தேகதிற்கோ தயக்கதிற்கோ இடம்கொடுக்க வேண்டாம்;  ஆராய்ச்சி சரியாக இருந்தால், வெற்றி நிச்சயம்.  எனவே,  வேலையை தொடங்கியபின்  தயங்குவதோ, தடுமாறுவதோ மூடத்தனம்.”

“ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள்” என்று வள்ளுவர் கூறுவன ஏராளம்.  (அவை எல்லாம் ஒரே அரசனிடம் உறை கொண்டிருந்தால் அந்த நாடு மிகவும் அதிர்ஷ்டம் செய்தது!)  அவற்றில், இந்த அதிகாரம் ஒரு செயலை செய்யும்முன் ஆராய்ந்து செய்வது பற்றியது.

ஒரு முயற்சியில் இறங்கும் முன்னே ஆழ்ந்து, நிதானமாக சிந்திக்க வேண்டும்.
“என்ன காரியம்”?”,
“ஏன் செய்கிறோம்?”,
“இதனால் என்ன இலாபம்?”,
“என்ன இழப்பு வரலாம்?”,
“என்ன பலன்?”,
“என்ன குறுக்கீடுகள் வரும்?”,
“அவற்றை வெல்ல சாம, தான, பேத, தண்டம் போன்ற உபாயங்களில் எது சிறந்தது?”,
“எது இதை செயல்படுத்த சிறந்த காலம்?”,
“யாரால் இதை செய்ய முடியும்?”,
“இதுபற்றி அறிஞர்களின் ஆலோசனை என்ன?”,

என்று பல்வேறு கோணங்களில் ஒரு சிந்தித்து.  “இதைச் செய்ய வேண்டும்”, அல்லது “இதை செய்ய வேண்டாம்” என்று முடிவெடுக்க வேண்டும். 

முடிவெடுத்த பின் இவற்றை பற்றி சிந்திக்க நேர்ந்தால், நம் ஆராய்ச்சியில் குறையுள்ளது என்றும், வெற்றி சற்று கடினம் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். 
இது, செயல் தொடங்கிய பின் நமது யுக்திகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலகுவாக   வளைந்துகொடுக்கும் தன்மை (flexible) உடையதாக இருக்கவேண்டிய அவசியத்தை மறுதலிக்கவில்லை.  கோட்பாடுகளில் தெளிவு இருக்க வேண்டும், செயற்திட்டம் திண்மையாக இருக்க வேண்டும் என்றே குறள் கூறுகிறது.

The recipe for success, according to this kural, is very simple. 

“Think about all the aspects of an endeavour and firm up your strategy before you initiate action on it.  Once action is initiated, do not give room to doubt.  If you have done your analysis correctly, success is certain.  Hence, entertaining doubt at that stage is shameful”

The list of qualities that Valluvar considers essential to a ruler is exhaustive. It is a very lucky country indeed if all these qualities are present at the same time in one king!  One of the most important qualities that a king must have is the ability to strategize in order to achieve a goal.  The thesis of this chapter, therinthuseyalvagai, is about the dimensions that ability.

Before setting out on a journey to achieve a goal, the executive should consider the various dimensions of the quests.  She should have the analysed and researched the problem completely and should have convincing answers to questions like:
“What is the purpose of this quest?”
“What are the benefits?”
“What are the risks?”
“Can I afford to take up this job?”
“What do experts say about this?”
“What is the best strategy to realize this objective?”
“What obstacles can I expect in completing this?”
“How do I respond?”
“What resources do I need?”
“Who is the best person to execute this?”
Once the analysis is complete, she takes a clear “Go” or “No go” decision.

If the decision is “Go”, then all her focus should be on implementing the chosen strategy instead of second guessing herself and entertaining doubts about the core principles.  If she does have to question core beliefs, she also has to understand that her analysis was incomplete and success is uncertain.

It is to be noted that this kural does not negate the need to be flexible in one’s tactics depending on what the circumstances are while executing a plan.  What it requires is strategic clarity.

66/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Governance Strategic Clarity, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5 


Blog link: http://kftd.blogspot.in/

Saturday, August 4, 2012

570: Goonda Raaj – பூமிக்கு பாரம்


கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
570   பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை
            Material Matters, Governance, Avoiding A reign of terror
 
Kallaarp pinikkung kadungOl athuvalla
Thillai nilaikku porai






மக்களை பயமுறுத்தி கடுமையான ஆட்சி செய்யும் அரசு கால வாக்கில் அந்த பயத்தை அதிகப்படுத்த படிக்காதவர்களை சேர்த்துக்கொள்ளும்.  அப்படிப்பட்ட அரசும் அது சார்ந்திருக்கும் முரடர்களின் கூடத்தையும்விட இந்த பூமிக்கு வேறு சுமையில்லை” என்று வருத்தமாக கூறுகிறது குறள்.

உலகில் உள்ள நல்ல ஆட்சிகள் எல்லாம் ஒரே விதத்தில் தான் நன்றாக உள்ளன.  ஆனால் கெட்ட ஆட்சிகளோ வெவ்வேறு விதங்களில் கெட்டவையாய் இருக்கின்றன!  அவற்றில் முதன்மையானது, தம் குடிகளையே பயத்தால் ஆளும் அரசாங்கங்கள்.  அவற்றை பற்றியதே இந்த அதிகாரம்.

ஒரு அரசு தன் மக்களை அச்சமுறுத்த தழைந்துவிட்டால், அதை செயல்படுத்த உபயோகிக்கும் படைக்கு சில ‘தகுதிகள்’ வேண்டும்.  குணமுள்ள எந்த வீரனும் தன் மக்களையே காரணமின்றி தாக்க உடன்பட மாட்டான்.  படித்த எந்த அமைச்சனும் அப்படிப்பட்ட ஆணைகளுக்கு துணை போக மாட்டான்.  நலவர்களும் நேர்மையானவர்களும் ஆட்சிலிருந்து விலகிவிடுவார்கள் அல்லது விலக்கப்படுவார்கள்.

எனவே அச்சத்தால் ஆளும் அரசுக்கு கல்வியறிவில்லாத, மூர்க்கமான முரடர்களே துணையாய் நிற்பார்கள்.  எப்பொழுது இப்படிபட்ட கூட்டம் அரசுக்கு துணை நிற்கிறதோ, அப்பொழுதே அந்த ஆட்சியில் உள்ள குடி மக்களுக்கு அரசு அரணாய் இருப்பது போய் அரசே பாரமாய் இருக்கும் நிலை வந்துவிட்டது என்று பொருள்.  இதனால்தான் இப்படிப்பட்ட ஆட்சியை ‘பூமிக்கு பாரம்” என்று கூறுகிறார் வள்ளுவர்.

இதை தெளிவாக ஹிட்லரின் ஆட்சியில் உலகம் கண்டது.  இப்பொழுது இந்தியாவிலும் இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் இழையோடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

(வெருவந்தம் = பயம்; பிணி = கட்டு; பொறை = பாரம்)

“Once a government has become so ineffective that it has no option but to use fear to subjugate its own citizens, it will accumulate a bunch of coarse, illiterate boors in the positions of power.  There is no greater burden that this earth can be forced to bear, once that comes about” laments the kural.

All good governments are good in the same way.  However, bad governments are bad in a million different ways.  Of the various ways a government can be bad, propagating a fear culture has to be one of the worst.  This chapter, veruvanthaseiyaamai, underlines how important it is for a government to avoid scaring its own citizens.

When a government unleashes a reign of terror on its own citizens it can only implement it by using an army composed of men with certain ‘qualities’.  No honourable soldier will consent harming to his own countrymen without due cause.    No well-educated, conscientious minister will agree to endorse such orders.  They will be either eliminated or will voluntarily quit.

The government will then divest to those thugs who are willing to execute any orders just as long as they can terrorize the populace.  The government and these brutal ruffians form a symbiotic relationship feeding on each other. From being the fence guarding the sheep, the government becomes the primary predator of its own citizens.  Therefore it is no wonder that Valluvar classifies such a reign as “burden to the earth”.

The veracity of this was amply demonstrated by Hitler & Mussolini not 60 years ago.  I am worried if such a trend is being manifested in the current Indian political climate where noble intentions are laughed at and almost no honourable person enters politics.

65/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Post Marital Love, Signalling, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்

Blog link: http://kftd.blogspot.in/

Sunday, July 29, 2012

799: How much treachery hurts - உதவவில்லை என்றால் உறுத்தும்


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
799      பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்
Material Matters, Friendship, Assessing Friends

Kedungaalak kaividuvaar kaenmai adungaalai
Ullinum ullam sudaum







நமக்கு ஒரு கேடு வரும் போது உதவாமலிருப்பவர்கள் நமது நண்பர்களே இல்லை.  அவர்களது கீழ்மை நாம் சாகும் வரை உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருக்கும்” என்று நட்பில்லாத நட்பைப் பற்றி விவரிக்கிறது குறள்.

நம் நண்பர்கள் எப்படி பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் அதிகாரம் இது.

வள்ளுவர் நண்பர்கள் எதேச்சையாக ஏற்படும் உறவாக நினைக்கவில்ல.  அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாய் இருக்கிறார்.  நட்பு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல், நமது வாழ்க்கைக்கு இம்மையிலும், மறுமையிலும் உதவுபவர்களாக இருத்தல் அவசியம் என்பது வள்ளுவரின் கோட்பாடு.  ‘நண்பன்’ என கூறப்படுவதற்கு ஒரு தகுதி, ஒரு தரம் வேண்டும் என்று நினைக்கிறார் அவர்.  நண்பர்களுக்கென்று அதிகாரங்கள், உரிமைகள், பயன்கள் இருக்கின்றன.  நம் மனதிற்கு பிடித்தவர்களெல்லாம் ‘நண்பர்கள்’ என்று கூருதலாகாது. எனவே, நம்முடன் பழகுபர்வகள் இனிமையாய் நடந்துகொண்டாலும், ‘நண்பர்கள்’ என்று கூறப்பட தகுதியானவர்கள்தானா என்று ஆராய்ந்து அறிந்த பிறகே அவர்களை அவ்வாறு அழைக்கவேண்டும் என்கிறார்.

இதில் கவனிக்க வேண்டியது, அவர் நம் நண்பர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறும் தகுதிகளெல்லாம் நமக்கு இருக்கிறதா என்று நம்மையே நாம் எடை தூக்கி பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே.

நாம் நம் நண்பர்களின் உதவியை மறக்காமல் இருக்கிறோமோ இல்லையோ, அவர்கள் நமக்கு உதவாததை நிச்சயம் மறக்க மாட்டோம்!  இந்த யதார்த்தத்தை அழகாய் சொல்கிறது குறள்.

(பி. கு: இந்தக் குறளை “நண்பனின் துரோகம் மரணம் வரும் நேரத்திலும் உள்ளதை சுடும்” என்றும் விளக்கலாம்.  எனக்கு அது அவ்வளவு சரி என்று தோன்றவில்லை.

(கேண்மை = நட்பு, உறவு; அடு = கொல்லுதல்)

If a ‘friend’ does not help us when we are in trouble, that betrayal rankles within us until we die” says the kural, explaining the consequences on us of a friend not discharging his duty.

This chapter, natpaaraithal, explains how one assesses one’s friends, after having started a relationship with them. 

For Valluvar, ‘friend’ is not just a Facebook status.  It is an honoured position with responsibilities, rights and rewards.  Like any valuable role, friends are selected, according to him, rather than accumulated by chance.  He recommends terminating a friendship if the ‘friend’ leads us astray or is not helping us in the larger journey of life – that of breaking the cycle of birth.

It is also not often appreciated that while he says “this is how your friends have to behave, to be recognized as friends”  he is also clearly implying that that is how we ourselves should behave to be rated as ‘friend’ by those whom we respect.  This self-analysis is expected and even required.

Again, the bard excels in his understanding of the human mind – while it is quite probable that we will forget all but the grandest assistance that we received from our friends, the merest slip in them coming to our assistance will stay fresh in our memory forever.  We may forgive but rarely will we forget!

PS: This kural is also interpreted as “The betrayal will be remembered even at the point of one’s death”.  I personally feel that is less likely than the explanation I have given.

63/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Assessing Friends, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்

Blog link: http://kftd.blogspot.in/

Thursday, July 19, 2012

946: All the diseases love a glutton – மிகையாய் உண்டால் மிகவும் ஆபத்து


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

946   பொருட்பால், நட்பியல், மருந்து
             Material Matters, Friendship, Medicine

Izhivarinthu unbaankann inbampol nirkkum
Kazhiper iraiyaankann noi







எவ்வளவு உண்டால் போதும் என்று அளவறிந்து அவ்வளவே உண்பவனிடம் நோய் அண்டாததால் இன்பம் நிலைத்து நிற்கும்.  ஆனால்  தேவைக்கு மேல் மலைப்பாம்பு இரை உண்பது போல் சாபிடுபவனிடம் நோய் விலகாது நிற்கும்” சாப்பிடும் அளவே நோய்க்கு மூலகாரணம் என்று உரைக்கிறது குறள்.

வள்ளுவர் நட்பியலில் பல்வேறு தீய பழக்கங்கள் குறித்து விரிந்துரைக்கிறார்.  ஒரு மாறுதலுக்கு இந்த அதிகாரத்தில் நோய் பற்றியும் அவற்றை குணப்படுத்தும் வழிகள் குறித்தும் விவரிக்கிறார்.

இப்பொழுது அளவாக உண்பது பற்றி அறிவுரை செய்யாத மக்கள் தொடர்பு மார்க்கமே இல்லை. அதிகம் உண்டால் நேரும் உடல் உபாதைகள் நிறைய உள்ளன என்பதும் நாம் அறிந்ததே.  அதனால் இந்தக் குறளைப் படித்ததும் “இதைக்கூட சொல்ல வேண்டுமா வள்ளுவர்?” என்று தோன்றலாம்.   இதில் கவனிக்க வேண்டியச விஷயம்  வள்ளுவர் இதை எழுதிய காலம். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நோய் வாதம், பித்தம் போன்ற சுரப்புகளின் குறை-நிறைகளால் வருகிறது என்று எல்லோரும் நினைத்த காலத்தில், வள்ளுவர் அளவாய் உண்பதின் அவசியத்தைகூறியிருக்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்திலேகூட அதிகம் உண்பவனை “சாப்பாட்டு ராமன்” என்று சற்றே பொறாமை கலந்து அழைப்பார்கள். நன்றாய் சாப்பிட்டால் உடம்பு நன்றாய் இருக்கும்; குண்டாய் இருப்பவன் பலசாலி, ஆரோக்கியம் உள்ளவன் போன்ற கருத்துக்களும் பரவலாய் இருந்தேன்.  இவ்வளவு சமீபமாய் இவ்வளவு தவறான எண்ணங்கள் இருந்தன என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் எழுதியதில் உள்ள நுண்ணறிவு தெளிவாகிறது.  இது பைபிளிலும் ஒரு பாவமாக கூறப் பட்டிருக்கிறது.

இலக்கிய நோக்கில் இரையான் என்ற சொற்பிரயோகதின் மூலம் வள்ளுவர் ஒரு பெரிய இரையை உண்டு கிடக்கும் மிருகத்தை நம் கண்முன்  நிறுத்துகிறார்.  அந்த உருவகத்தின் வாயிலாகவே அதில் உள்ள தீமையையும் உணர்த்துகிறார்.

(இழி= அளவு; கழி = நிறைய)

A man who eats the right amount will always be happy as he will never be troubled by disease.  A glutton, on the other hand, will always be sick” says the kural, highlighting the long term benefits of a good diet.

In the section on friendship, Valluvar talks about various bad habits and evil actions and cautions against them generally.  Presumably this is because evil requires company.  In this chapter, marunthu, he changes pace a bit and talks about causes of diseases and the various ways of preventing them.

Today, there is a veritable media blitz on the evils of over-eating and the benefits of a good diet.  If you have not been living under a rock in the last 20-25 years, you know that gluttony is not only a sin but is also bad for your health.   Therefore the first reaction on reading the kural could be “Why is Valluvar talking about such an obvious thing?  Was he just filling up the count to 1330?”  One should realize that it is with the benefit of hindsight.

Even when I was a boy, a trencherman was admired. Eating well, and a bit more, was the ticket to health and strength.  Keeping in mind these erroneous attitudes were prevalent as recently as 30 years ago, our appreciation for the wisdom expressed in the kural increases.   Remember, this was a time when it was thought that disease were a result of imbalance of the various kinds of humours like bile, phlegm etc.  (Valluvar himself says this in the first kural in this chapter).  Therefore, to me, the insight on the benefits of a restricted diet is astounding.

58/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Medicine, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், நட்பியல், மருந்து

Blog link: http://kftd.blogspot.in/

Wednesday, July 18, 2012

1039: Care for your land like it is your wife - மனையை மனைவிபோல் மதி


செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

1039   பொருட்பால், குடியியல், உழவு
             Material Matters, Citizenship, Farming

Sellaan kizhavan iruppin nilampulanthu
Illaalin oodi vidum







“நிலம் என்பது மனைவியை போன்றது.  மனைவியை சரியாக மதித்து அவளுக்கு செய்ய வேண்டியவைகளை செய்யவில்லை என்றால் அவள் கணவனை வெறுக்க துவங்குவாள். அதன் பின்னரும் அவன் சரியாகவில்லையென்றால், சண்டைபோட்டுக்கொண்டு விலகி விடுவாள்.  அதே போல், நிலத்திற்கு சொந்தக்காரன் அதை சரிவர கவனித்து பராமரிக்கவில்லை என்றால் நிலமும் அவனிடம் ஒத்துழைக்காது.  அலட்சியம் தொடர்ந்தால், நிலம் பாழாகி பயனற்றுவிடும்” என்று எச்சரிக்கிறது குறள்.

அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு நாட்டின் முதுகெலும்பே அதன் உழவர்கள்தான்.  அவர்கள் உழைத்து தானியங்களை உருவாக்காவிட்டால் என்ன கதி என்று விளக்கும் அதிகாரம் இது.

மனைவியும் மனையும் ஒன்றே; இரண்டும் பேணி பாதுகாத்தால் பலன் தரும்.  அலட்சிய படுத்தினால் ஒத்துழைக்காமல் ஆக்கத்தை நிறுத்திவிடும்.  இதை ஊடலுடன் ஒப்பிட்டு இரண்டுக்குமான உறவுகளின் பரிணாமங்களை உணர்த்துகிறார் புலவர்.

(கிழவன் = உரிமையுள்ளவன்)

“A farm land is just like a wife.  Take good care of it, and it will reward you with a fertile bounty.  Neglect it and just like a wife, it will warn you initially by not co-operating. Persist in the neglect and just like a woman, the land too will abandon you and become unproductive.” cautions the kural.

Any nation or land depends on its farmers.  If they do not produce the food, all other economic activity will come to a grinding end. In that sense they are the  primary engines of an economy be it agrarian or industrial.  This chapter, uzhavu, emphasises the importance of farming.
The aptness of the passive-aggressive warning underscores the similarities between a wife and a field.  Both require care and nurturing to remain fertile and productive.  Valluvar brings out the layers of meaning loaded into such a relationship by using the word “oodal” which signifies a tiff, normally between husband and wife.  The causality and the progression of the tiff is implied very economically in the seven words that he uses.

57/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Citizenship, Farming, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், குடியியல், உழவு

Blog link: http://kftd.blogspot.in/

Monday, July 16, 2012

913: A Prostitute’s embrace - விலை மகளின் தழுவல்


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

913   பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்
             Material Matters, Friendship, Prostitutes

Porutpendir poimai muyakkam iruttaraiyil
Yethil pinanthazhiee atru







“ஆளை விரும்பாமல் பொருளை மட்டுமே விரும்பும் விலை மகளிரின் தழுவல் எது போன்றது என்றால், கூலிக்கு பிணமெடுப்பார் இருட்டறையில் பிணத்தை தூக்கும் போது தழுவுவது போல் தான்” என்று அருவெருப்பூட்டும் உவமை மூலம் வள்ளுவர் விலைமகளிர்களை  நாடுவது பற்றி தன் கருத்தை தெரிவிக்கிறார்.

வள்ளுவர் சில விஷயங்களை அறவே வெறுக்கிறார்.  அவற்றை சாடுவதில் அவருக்கு சிறிதும் தயக்கமில்லை.  அவற்றில் ஒன்று இந்த அதிகாரம். இது பொது மகளிரை நாடுவது கீழ்மை என்று கூறும் அதிகாரம்.

பிணம் தூக்குபவர்கள் இருட்டறையில் வேலை செய்யும் போது இருக்கும் மனநிலை வரப்போகும் காசைப் நினைத்துக்கொண்டிருக்கும்.  உள்ளுக்குள் அருவெறுப்பு இருந்தாலும், வெளியில் அக்கறை உள்ளவர் போல் நடித்து அந்தப் பிணத்தை தழுவி தூக்க வேண்டிவரும்.  விலை மாதர்கள் தழுவும் போது அதனால் வரபோகும் பொருள் பற்றி மட்டுமே அவர்கள் எண்ணம் இருப்பதால், கூலிக்கு பிணத்தை தூக்குபவர்களுடன் ஒப்பிடுகிறார் புலவர். 

இந்த உவமை மூலமே வள்ளுவர் வரைவின் மகளிரை நாடுவது பற்றி அவருக்கு இருக்கும் அசூயையை வெறுப்பை அழுத்தமாக வெளியிடுகிறார்.

(வரைவின் = திருமணமில்லாத, முயக்கம் = தழுவல், புணர்ச்சி; ஏதில் = அன்னியர்; தழீஇ = தழுவுதல்)

Prostitutes are “Material Girls” literally, according to Valluvar. They don’t love you.  They are only interested in the money you will give them.  Their embrace reflects this – it is perfunctory and without feeling.  It is similar to the embrace that undertakers bestow on stranger’s corpses when they handle them in rooms without light – driven by money, necessity  and without any love in the act.”  Thus goes the odious comparison from Valluvar in this kural.  The very repugnance that he induces in the reader at the metaphor reflects his deep distaste for soliciting prostitutes.

Like his proscription of gambling and drinking, Valluvar does not see any extenuating circumstances for engaging a street walker.  He roundly and unreservedly condemns it in this chapter, varaivinmagalir.

The name of the chapter means “Women without wedding”.

When an undertaker handles a corpse, he only does it for the money.  Even if he is put-off by the carcass, he still cannot exhibit his disgust. On the contrary he has to display every sign of caring when he handles the body, perhaps even going as far as to embrace it during the course of his ministrations.  The embrace from a hooker is identical in intent and purpose.  She too is thinking only of the money and pretending affection.  The only motivation for the embrace is necessity – you wont pay otherwise.  Therefore, cautions the bard, avoid seeking such strumpets. 

It is a disgusting comparison; but it is only a reflection of the deep disgust he feels for this association.

56/1330

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Prostitutes, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்

Blog link: http://kftd.blogspot.in/