Wednesday, June 27, 2012

773: The Height of manliness – ஆண்மையின் உச்சம்



பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
773      பொருட்பால், படையியல், படைச்செருக்கு          
Material Matters, Warfare, An army’s pride

Peraanmai yenba tharukannon drutrakkaal
Ooraannmai matrathan yeghu






செய்யும் வேலையில் ஒரு கர்வம், ஒரு அகம்பாவம், இருந்தால்தான் வேலை சிறக்கும்.  அதுவும், ஒரு நாட்டின் படை வீரர்களுக்கு தம்மை பற்றிய செருக்கு மிக அவசியம்.  போர்வீரனுக்கு “என்னை விட வேறு எவரும் உயர்ந்தவரில்லை, வீரரில்லை” என்ற இறுமாப்பே முதற்கவசம்.  இது தற்கால படைகளிலும், நிறுவனங்களிலும் ஊழியர்களை ஊக்குவிக்க பின்பற்றபடுகிறது.  இந்தச் செருக்கின் அடையாளங்களை விளக்குவதே இந்த அதிகாரம்.

“அஞ்சாமல், ஈவு, இரக்கமில்லாமல் பகைவனைக் தாக்குவதே ஆண்மையின் அடையாளம் என்று சான்றோர் செப்புவர்.  அதே பகைவனுக்கு ஒரு பின்னடைவு வந்தால், அதை சாதகமாக்கிக் கொள்ளாமல், அவனுக்கு கைகொடுக்கும் தாராள மனம் அந்த ஆண்மைக்கு கூர்மை சேர்க்கும் அம்புமுனை.” என்று படைசெருக்கின் உச்சகட்டத்தை விளக்குகிறது குறள்.

இதை சாதாரணமாக “பகைவனிடமும் தயை காட்டவேண்டும்” என்று அறிஞர்கள் விளக்குவர்.  ஆனால், எனக்கு இது ஒப்பவில்லை.  அப்படி இருந்தால், இதை படைச்செருக்கு அதிகாரத்தில் வைத்திருக்கமாட்டார் வள்ளுவர்.  என்னைப் பொறுத்தவரையில் இதை மனோதத்துவ (psychology) கோணத்தில் நோக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

வீழ்ந்த பகைவனுக்கு உதவி செய்து பின்னர் அவனை தோற்கடித்தால், அந்த வீரனுக்கு தன் திறமைமீதும், வீரத்தின்மீதும் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்? எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி செய்யத் தோன்றும்? அப்படி செய்தால், அந்த பகைவனின் நிலை என்னவாகும்?  தோற்றாலும் அவமானம், பின்னர் ஜெயித்தாலும் அவமானம்.  அவனுடைய தன்னம்பிக்கையை பூண்டோடு அழித்துவிடாதா, இந்தச் செய்கை?  இந்த கண்ணோட்டத்திலேயே இந்த குறளை படிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த குறள் இராமன் இராவணனை “இன்று போய் நாளை வா” என்று கூறியதை குறிப்பிடுகிறது என்று பரிமேலழகர் உட்பட பலர் கூறியுள்ளனர்.  இதனாலேயே வள்ளுவர் ஒரு இந்து என்றும் கூறுபவரும் உண்டு.  (அவசியமில்லை. இது ஒரு கலாச்சார உவமையாய் இருக்கலாம்.)  இராமனின் இந்த செய்கையை தயை நோக்கில் காண்பதைவிட செருக்கு நோக்கில் கண்டால் இந்த கட்டத்தில்தான் இராவணன் தோற்றான் என்பது தெளிவாகும்.

பகைவனுக்கு தன் ஆளுமையை உணர்த்தி அவனுக்கு எரிச்சலுட்ட இதை விட சிறந்த வழி கிடையாது!

(தறுகண் = அஞ்சாமை; செருக்கு = கர்வம்; ஊராண்மை=தாராளம்)

Pride in one’s skills is essential to completing a job well. Particularly for a soldier, the feeling that there is nobody better nor braver than he, is the first line of defence.  Even present day armies and HR departments of various organizations use the sense of pride to motivate their employees.  Valluvar talks about the importance of this well-developed arrogance to an army and to individual soldiers in that army in this chapter, padaichcherukku.

“It is said that to ruthlessly and valorously attack an enemy is the hallmark of manliness.  However, if the same enemy is at a disadvantage, to chivalrously refuse to profit from it and to offer him assistance is the pinnacle of that manliness.” sings the kural about the alpha male.

Most scholars interpret this to mean that one should show mercy even to an adversary on the battlefield.  I beg to differ.  If that were the case, Valluvar would not have placed this kural in a chapter talking about the arrogance of an army.  I believe Valluvar is going deeper and is outlining a way to completely destroy your opponent, not merely defeat him. 

Imagine the sheer audacity that is required to offer assistance to a fallen enemy.  What supreme confidence.  What arrogance. What pride.  Imagine too, the plight of the foe – he is trapped.  If he wins after that, everybody would know that he was vanquished before and only won because of his opponent’s mercy.  He can take no satisfaction from it.  Heaven forbid, if he loses, he has no greater shame than to be beaten so comprehensively.  Either outcome will completely demolish his confidence, if he were a half way competent warrior who too takes pride in his valour.  He can never recover from the shame.  I think this is the correct assessment of the intent of this kural.

This kural is commonly thought to refer to the scene in Ramayana where Rama bids the defeated Ravana to “Go now and come tomorrow, refreshed.  (Let us continue the fight then)”.  Therefore, claim some, Valluvar is a Hindu.  (I think not.  The Ramayana pervades the Indian sub-continent so thoroughly that it could be a pure cultural reference).  I think the interpretation that this shows Rama’s supreme confidence rather than his compassion is the correct one.  It is clear that it is at this instant that Ravana lost the war. 

I can think of no better way to dominate your opponent and irritate him than this act of  ‘mercy’!

41/1330

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Warfare, An armys pride,  குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், படையியல், படைச்செருக்கு
Blog link: http://kftd.blogspot.in/

1 comment:

  1. A friend of mine suggested that the aanmai (ஆண்மை) word can be split as Alum+thanmai which is the ability to dominate. The insight of the kural is probably enhanced if this meaning is used.

    However, I feel given the times Valluvar was writing in, he was referring to manliness.

    ReplyDelete