Sunday, June 3, 2012

KFTD – 490: Patience and timing



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

490 பொருட்பால்- அரசியல்- காலமறிதல்

kokkokka koombum paruvathu matrathan
kuthokka seertha idathu




எந்த ஒரு வேலையையும் சிறப்பாக முடிக்க அது தகையும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்.  அது தகையும் நேரத்தை கணிப்பதே காலமறிதல். 
இந்தக் கருத்தை வள்ளுவர் ஒரு மிகச் சிறந்த உவமை மூலமாக நமக்கு உணர்த்துகிறார். ஒரு கொக்கை மீனை பிடிக்க அமைதியாக, சலனமின்றி, பொறுமையாக உயிரில்லாதது போல் காத்துக்கொண்டிருக்கும்.  ஏமாந்த மீன் அருகில் வந்தாலோ, அது தப்புமுன் குத்தி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும்.  அது போலவே, தகையும் நேரம் வரும் வரை பொறுமையை காத்திருந்து விட்டு, கைகூடும் நேரம் வந்ததும் உடனே, துரிதமாக செயலாற்றி வெற்றி கொள்ள வேண்டும்.
விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் டைமிங் (timing) மிக முக்கியம்.

To accomplish anything, it is important not only to have the requisite skills and competence but also the ability to assess the right time for the undertaking to be a success.  This sense of timing is kaalamarithal, the name of this chapter.

Valluvar brings out the importance of timing by means of a metaphor: An egret, when out fishing, waits patiently, soundlessly, motionlessly for the fish to come near.  This phase of low profile, prepared waiting is the key to its success when a fish does come nigh, not realizing the danger.  When that moment comes, the egret spears the fish in a flash, with no hesitation and with alacrity. 
These dual qualities, waiting for the opportune moment patiently and acting decisively, without hesitation when the waited for opportunity presents itself, will ensure success every time.

Timing is essential not just in sports but in life too.

17/1330

No comments:

Post a Comment