Tuesday, July 3, 2012

839: The Joy of an idiot’s friendship – பேதையின் நட்பு இனிமையானது


பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
     
839   பொருட்பால், நட்பியல், பேதைமை
Material Matters, Friendship, Stupidity

Perithinithu pethaiyaar kenmai pirivinkann
Peezhai thruvathon dril






இப்பொழுது நாம் நட்பில் பேதம் பார்ப்பதில்லை.  நமக்கு பிடித்திருந்தால், யாரையும் நண்பராக ஏற்றுக்கொள்கிறோம், “நண்பேண்டா” என்று கொண்டாடுகிறோம்.  வள்ளுவர் அப்படியில்லை.  யாரிடம் நட்பு கொள்ளவேண்டும், தகாதவரிடம் நட்பு கொண்டால் அதன் விளைவு என்ன என்று நட்பியலில் பட்டியலிட்டிருக்கிறார்.  பேதைகளிடம் நட்பு கொள்வது பற்றி இந்த அதிகாரத்தில் கூறுகிறார்.

“பேதை என்றால் நல்லது-கெட்டது தெரியாதவர்.  இந்த பேதைகளிடம் நட்புறவு வைத்துக்கொள்வது ,மிகவும் இனிமையானது.  ஏனென்றால், அவர்களிடமிருந்து பிரியும் பொழுது பெரும் துன்பம் எதுவும் தோன்றுவதில்லை.” என்று வஞ்சப் புகழ்ச்சி பாடுகிறார் புலவர்.

இதை மேலெழுந்தவாரியாக “வள்ளுவர் நட்பிலும் இலாபத்தை எதிர்பார்க்கிறார்” என்று கூறலாம். அது உண்மையே. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நட்பு வேறு, அன்பு வேறு.  எல்லோரிடமும் அன்புடன் இருக்க வேண்டும்.  நட்பில் இரு சாராருக்கும் பலன் இருக்க வேண்டும்.  இது வள்ளுவரின் கோட்பாடு.  இந்த வாதத்தை இன்னும் பின்பற்றினால், நட்பு சமமானவர்களின் மத்தியில்மட்டுமே இருக்கலாம்.

எனக்கு இதில் உடன்பாடு இல்லை.  இந்தக் கோட்பாடு சேர்க்கைக்கு (association) ஏற்புடையதாய் இருக்கலாம், நட்புக்கு (friendship) அல்ல என்பது என் கருத்து.  பேதைகளுடன் சேர்வதால் பயன் இல்லை;  பயனை மட்டும் எதிர்பார்த்தால் அது நட்பில்லை.

Unlike contemporary times when compatibility and liking are the only criteria for friendship, Valluvar has a clear idea that friendship has to be appropriate.  Perhaps it is a function of increasing democratization in all walks of life. He proceeds to list the consequences of inappropriate friendship in multiple chapters.  This specific chapter, pethamai, talks about associating with fools.

“It is a pleasure to associate with stupid people because there is no great pain when one stops interacting with them” tells this kural, quite superciliously.

It is quite clear that for Valluvar, a friendship has to have a clear benefit.  Without the benefit, he considers friendship not only useless but a waste of time.  He does distinguish between being loving and friendship but I find it very difficult to agree with this kural.   This instrumental definition is probably alright if once assumes he is talking about one’s associations with people for a purpose.  However, if one chooses to interpret these guidelines for ‘friends’ as we understand it today, and worse, apply these guidelines, one would soon be left with no friends.

True, it is probably not very profitable to have a friendship with an idiot but is it really friendship if profit is the only motive?

45/1330

Image courtesy: http://www.cartoonstock.com/directory/I/Im_with_stupid.asp

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Stupidity,  குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், நட்பியல், பேதைமை

Blog link: http://kftd.blogspot.in/

3 comments:

  1. Would be more interesting if you could translate the Kural first, so I can know verbatim what it means, then go on to provide your commentary! Don't you think so.

    ReplyDelete
  2. Talking about friendship on the 18th of this month (ஈரடியாரும் நாலடியாரும் கண்ட நட்பியல் சிந்தனைகள் - என்ற தலைப்பி). I was search for new information or studies, thus came across this site. Thanks

    ReplyDelete
  3. Will share the zoom link later. Sunday at 3.00 PM on the 18th. Would appreciate additional information, if any.

    ReplyDelete