Wednesday, July 4, 2012

623: Troubling Trouble Itself – தொல்லையை தொலைத்துவிடு


இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
623   பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை    
Material Matters, Governance, Overcoming Obstacles

Idumbaikk kidumbai paduppar idumbaikk
Kidumbai padaaA thavar






“ஒரு வேலை செய்யும் போது, ஒரு தடங்கலோ, துன்பமோ வந்தால், அதற்கு வருந்தாமல், கலங்காமல் எவர் உழைகிராரோ அவர் அந்த துன்பதிற்கே துன்பம் தருவார்” என்று மனம் கலங்காமலிருக்குமாறு போதிக்கிறது குறள்.

இந்தக் குறள் துன்பமோ தடங்கலோ வரும் வேலையில் அதற்கு அயராமல் உழைக்க வேண்டும் என்று கூறும் இடுக்கணழியாமை அதிகாரத்தில் வருகிறது.  எந்த வேலையை எடுத்துக்கொண்டலும் தடங்கல் வருவது சகஜமே.  அதனால் துவண்டுவிடுபவன் தோல்வியை ஆரத்தழுவிக்கொண்டேயிருப்பான்.  அதை மீறி செயல்பட்டாலே வெற்றி கிட்டும்.

(இடுக்கண் = துன்பம், தொல்லை; இடும்பை = துன்பம், துயரம்)

“The man who perseveres in the face of hardship will  overcome it and give a hard time to the hardship” says this alliterative kural underscoring the importance of persistence.

This entire chapter, idukkannazhiyaamai, talks about the importance of not letting any obstacle get you down when you set out to achieve something.  Setbacks are normal and expected in any undertaking.  The executive who gets fazed by them instead of getting inspired to overcome them cannot be successful in the long run.

46/1330

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Governance, Overcoming Obstacles,  குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை

Blog link: http://kftd.blogspot.in/

No comments:

Post a Comment