நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
1148 காமத்துப்பால்,
களவியல், அலரறிவுறுத்தல்
Sexuality, Pre-Marital Love,
Scandalous Affair
Neiyaal yerinuthuppEm yendratraal kavvaiyaal
Kaamam nuthuppEn yenal
“நம் காதலைப் பற்றி பழித்து பேசுவதால் அது
அழிந்து விடும் என்று ஊரார் நினைப்பது எரியும் தீயை நெய் ஊற்றி அணைக்க எண்ணுவது
போலாகும்” என்று காதல் புகழ் பாடுகிறது குறள்.
மணமாவதற்க்கு முன் காதலில் உள்ள சுவையும்
பிரச்சினைகளும் தனி வகையானவை. அதுவும்
நமது கலாசாரத்தில் இது ஒரு வகையான போராட்டமாகிறது. பிறர் பேசுவதால் அந்தரங்கமான உணர்வுகளும் உறவுகளும் பகிரங்கமாகின்றன. அச்சம்,
மடம், நாணம், போன்ற உணர்ச்சிகளால் இந்த நிலை பலர் அறிய இருப்பது
தாங்கமுடியாததாகிறது. இந்த நிலையை
வருணிக்கும் அதிகாரமே அலரறிவுறுத்தல்.
இந்தக் குறளில் உள்ள எதார்த்தம் என்னை
மிகவும் கவருகின்றது. காதலித்தால் அதை
பற்றி ஊர் வம்பு பேசுவது இயற்கை. அந்தப்
பேச்சினால் காதலர்களின் பிடிவாதமும், காதலும் கூடுவது எதிர்பார்க்ககூடியதே. இதை நெய்யூற்றி தீயை அணைப்பதுடன் ஒப்பிட்டு
இதில் உள்ள அர்த்தத்தின் ஆழத்தை எளிதாய் வெளியிடுகிறார் வள்ளுவர்.
(அலர் = ஒருத்தி ஒருத்தனைக்
காதலிப்பதறிந்து ஊரார் இருவரையும் பழித்துக் கூறல்; கெளவை = வெளிப்படல், பழிச்சொல்;
நுதுத்தல் = அழித்தல்)
“If the others think that our
love will wilt because of their malicious gossip, they should understand it is
akin to dousing a fire with ghee” exult the lovers in this kural.
Lovers in any culture go through an emotional roller coaster
before their love is culminated in marriage. As long as it is not scandalous gossip
does not hurt two people in love in other cultures. Our culture offers additional dimensions of
problems to the lovers – gossip about a couple’s love makes public a very
private emotion and relationship. The natural
shyness of the woman makes it unbearable that it is overt. This chapter, aralarivuruthal, talks about
the effects of such gossip on the couple and their love. (The fact I could not
find any image on google to convey the concept ( no doubt due to my inadequate
search skills) shows how alien this concept is to the West)
I
particularly like the naturalness of this kural. People gossiping about lovers is very common.
The very fact that their love is public and is the subject of gossip increases
the lover’s resolve to just go on loving. This is essential psychology – that which
is forbidden becomes more attractive.
Comparing it to an attempt to douse a fire with fuel shows the effect of
such efforts effortlessly.
61/1330
No comments:
Post a Comment