ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
215 அறத்துப்பால்,
இல்லறவியல், ஒப்புரவறிதல்
Spirituality, Domestic Life, Understanding
Societal Norms
Ooruni neernirain thatre ulagavaam
Perari vaalan thiru
“உலக நடப்பை அறிந்து, உழைத்து
சம்பாதிக்க முடியாதவர்களுக்கு தானே உதவும் அறிவு படைத்த அறிவாளனிடம் இருக்கும்
செல்வம், ஊரே மொண்டு குடிக்கும் குளத்தில் நீர் நிறைந்து நிற்பது போன்றது” என்று
வங்கிகள் உருவாக்கபடுவதற்க்கு முன்பே அவற்றின் தத்துவத்தை விளக்குகிறது குறள்.
முன்பே கண்டது போல், சமுதாயத்தில்
சேர்ந்து வாழும் போது வெறும் சட்ட-திட்டங்கள் நம் நடத்தையை நிர்ணயிப்பதில்லை. “ஒருவன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்” என்று
சொல்லப்படாத ஆனால் எல்லோரும் உணர்ந்த எதிர்பார்ப்புக்களும் உள்ளன. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்வது
எப்படி என்றுரைக்கும் அதிகாரம் இது.
கேட்டால் கொடுக்க வேண்டும் என்பது ஒரு
நிலை. கேட்காவிட்டாலும் ஒருவரது நிலைமை
அறிந்து தானே கொடுக்க வேண்டும் என்பது அடுத்த தளம். தானே நடப்பறிந்து கொடுத்தால் கேட்க வேண்டிய அவசியமும்
இல்லை. இந்த கொள்கை எல்லா
செல்வந்தர்களாலும் கடைபிடிக்கப்பட்டால், இருப்பவன்-இல்லாதவன் என்ற பேதம் இல்லை. இது நடந்தால், அமெரிக்காவில் இப்பொது நடக்கும் “சுவற்றுத்
தெருவை நிறப்பு” (Occupy Wall Street!) போராட்டம்
தேவையற்றதாகிவிடும். உண்மையான கம்யுனிச கொள்கை இது!
என்னை நிருடிய விஷயங்கள் என்னவென்றால் (1)
இந்தகொள்கையால் சோம்பேறிகள் அதிகமாவார்கள் (2) இந்த அதிகாரம் முழுவதுமே
“உலக நிலைமையறிந்து தானே கொடு” என்று பல்வேறு வகைகளில் கூறப்பட்டுள்ளது. பொது நடத்தைக்கு கட்டுப்பட்டு நடபதென்றால் கொடுப்பதை
தவிர வேறு எதுவும் இல்லையா?
என்னை கவர்ந்த விஷயங்கள் வள்ளுவரின்
பொருளாதாரம் பற்றிய நுண்ணறிவும், அதை சொல்ல அவர் கொடுக்கும் உவமையுமே. இந்த உவமை வாயிலாக “இது போன்ற செல்வம்
பொதுவானது”, “வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மையுடையது”, நீ”ண்ட நாட்கள் கெடாமல்
இருக்க வல்லது” என்ற கருத்துக்கள் மறைந்து நிற்கின்றன.
(ஊருணி = ஊர் கிணறு/ குளம்; ஒப்புரவு = உலக
ஒழுக்கம், பழக்க வழக்கம்)
“When wealth accumulates with an
intelligent man who is capable of understanding the needs of others who are
unable earn a living, and provide for them, it is like water accumulating in the
common village well – available to all the needy when they need it” says the
kural, anticipating the creation of banking.
When a man chooses to live in society, he has to not only
follow written laws and rules in his conduct, but also the unwritten &
implicit guidelines of behaviour imposed on him by the society at large. This
chapter, oppuravarithal, talks about conforming to those unspoken standards of
behaviour.
The poet feels that it is not enough to give when
asked. He expects a sensitive and
intelligent man to be able to anticipate the needs of the less fortunate and
provide for them voluntarily. When this
is done voluntarily, the expectation is that those who cannot earn a
living due to whatever circumstances are also taken care of. Such a philosophy, if adopted by the wealthy,
would render the current “Occupy Wall Street” protests moot.
Veritably, this is the essence of communism.
However, I feel this is not a practical kural, contrary to Valluvar’s
usual “no nonsense” approach. Such a
policy will create an army of claimants to the wealth as it is easy to convince
even oneself that one “needs” it and one “cannot” earn a living. The other concern I have is a bit meta – the entire
chapter talks largely about helping the ‘needy’ of one’s own volition. Surely there is more to conforming to
societal norms than giving unasked?
I like the kural because displays Valluvar’s knowledge of
economics – the creation of a buffer for shocks is very important in levelling and
controlling spikes. His choice of
metaphor – a common well – to convey the concept is very apt in that it reinforces
the underlying qualities of “common”, “accumulative” and “unspoilt”.
60/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spirituality,
Domestic Life, Understanding Societal Norms, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், அறத்துப்பால்,
இல்லறவியல், ஒப்புரவறிதல்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment