Showing posts with label தினமொரு குறள். Show all posts
Showing posts with label தினமொரு குறள். Show all posts

Thursday, August 30, 2012

849: Identifying Idiots - அறிவற்றவனின் அடையாளம்


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

849   பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை
            Material Matters, Friendship, Stupidity

Kaanaathaan kaatuvaan thaankaanaan kaanaathaan
Kandaanaam thaankanda vaaru






அறிவற்ற ஒருவனுக்கு விஷயம் அறிந்தவன் அறிவுறுத்த நினைத்தால், அவனை முன்னவன் அறிவற்றவனாக நினைப்பான்.  மேலும், அறிவை காணாதவன், தான் அறிந்தது மட்டுமே அறிவு என்றும் எண்ணிக்கொள்வான்” என்று மோனையாக விளக்குகிறது குறள்.

நம் நண்பர்கள் அறிவாளிகளாய் இருக்க வேண்டும் என்பதில் வள்ளுவர் தெளிவாக இருக்கிறார்.  இதனால், முட்டாள்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வது அவசியமாகிறது.  அறிவற்றவர்களை அடையாளம் காண்பதெப்படி என்று விளக்கும் அதிகாரம் “புல்லறிவாண்மை”.

அறிவுறையை ஏற்று கொள்ள தன்னம்பிக்கை வேண்டும்.  சொல்லப் போனால் என் அனுபவத்தில், ஒரு வல்லுனரின் அடையாளமே “எனக்கு தெரியாது” என்று சொல்லக்கூடிய தைரியம் இருப்பதே.  அது இல்லாதவர்கள், புது விஷயங்களை எற்றுகொள்வதில்லை.  வளராமல், மாறாமல் இருப்பது அறிவு இல்லை – வெறும் அபிப்ராயமே. 

தம் அறிவை வளர்த்துக் கொள்ளாதவர்களிடம் நட்பு கொண்டால் நாளிடைவில் அது வெறுப்பில் முடியும்.  இதனால்தான் வள்ளுவர் அறிவிள்ளதவர்களிடம் நட்பு கூடாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

இந்தக் குறளில், சொல்வன்மை கவனிக்க தக்கது.  “காணுதல்” என்னும் சொற்றொடரை அறிவுக்கு குறிப்பாக பயன்படுத்துவதால், அறிவற்றவர்களின் குருட்டுத்தனமும் அழகாக வெளிப்படுகிறது, மோனையும் சிறப்பாக அமைகிறது.


“The mark of an idiot is his closed attitude – if an intelligent man tries to educate an idiot, the latter will disregard the advice and conversely, consider the former an idiot.  An idiot thinks only what he knows is knowledge and nothing else matters” asserts this alliterative kural.

Valluvar cautions against associating with stupid people, or even just intellectually inferior people, multiple times in the Thirukural.  It is therefore important to be able to identify stupid people.  This chapter, pullarivaanmai, talks about how to identify such idiots.

In my experience, the hallmark of an expert is his ability to say “I don’t know”.  Accepting one’s ignorance is the first step in acquiring knowledge.  It requires confidence in one’s own expertise and one’s ability to learn new things. (It also implies that what he does know, he knows well!).  An idiot, on the other hand, never accepts it, partially as a result of his fear of being exposed. 

Knowledge which does not change, grow, improve, which is static is not knowledge at all. It is merely dogma, at best an opinion.  A closed attitude therefore is a clear predictor of an idiot on the horizon.  This attitude is further manifested by the inability to accept as ‘knowledge’ anything outside the idiot’s ken.

Continued association with a person who simply refuses to augment his knowledge will, in time, lead to frustration.   Perhaps this is the reason Valluvar consistently cautions against associating with them.  Like the popular quote goes “Do not deal with the stupid , they drag you down to their level and beat you with experience”!

Valluvar uses “seeing” as a metaphor for intelligence in this kural.  This helps in the alliteration and more importantly, underlines the deliberate blindness of the stupid. 

69/1330

Image courtesy: http://www.sharenator.com/Stupid_people_things_and_stuff/#/stupid_bush1_Stupid_people_things_and_stuff-5.html  

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Stupidity, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Wednesday, August 29, 2012

351: Truth vs truth – மெய்யான மெய்யை உணர்தல்


பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

351   அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்
            Spiritual Matters, Asceticism, Realizing the Truth

Porulalla vatrai porulen drunarum
Mauralaanaam maanaap pirappu







மெய்பொருள் இல்லாதவற்றை மெய்பொருள் என்று எண்ணி மயங்கினால் இந்த பிறவி மாயையிலிருந்து விடுதலையே இல்லை” என்று சற்று சுழற்சியாக விளக்கும் குறள் இது.


உலகில் உள்ள மதங்கள் எல்லாமே பரம்பொருளை விளக்கும் முயற்சிகளே.  “ஏன் வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு இலக்கையும், “எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலையும் தருவன.  துறவறம் மேற்கொள்வது முதல் கேள்விக்கு பதிலான மெய்பொருளை உணர்வதற்க்குத்தான்.  அந்த மெய்பொருளை அடையாளம் காட்டும் அதிகாரம் இது. 


இந்து மத கோட்பாடுகளின்படி இறையை உணர்தலே வாழ்கையின் இலக்கு.  அந்த முயற்சியில் தவறான முடிவை நோக்கி பிரயாணித்தால்  வாழ்கையே வீணாகிவிடும்.  மேலும் இந்த பிறவியை வீணடித்தால் இந்த பிறவியில் செய்த பாவத்தால் அடுத்த பிறவியில் பின்னடைவு ஏற்படும்.  எனவே, சரியான இலக்கை நோக்கி செல்லவது மிகவும் முக்கியமானது. 

இந்த தத்துவத்தில் எந்த குறையும் இல்லை.  ஆனால், உண்மையான மெய்பொருளை அடையாளம் காண்பதெப்படி என்று இந்தக் குறளிலோ அதிகாரதிலோ விளக்கப் படவில்லை.  உணர்ந்தால் தான் தெரியும் என்றால், அது மெய்பொருள் அல்ல என்று எப்படி உணரமுடியும்?  தர்க்கரீதியாக என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை.

பி.கு: புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதால் “தினமொரு குறள்” இரண்டு வாரங்களாக தடைப் பட்டு விட்டது.  அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.  தினப்படி செயல்பாடு ஒழுங்காகும் வரை இந்த முயற்சி சற்று சீராக வராமலிருக்கலாம்.  அதற்கு முன்கூட்டியே மன்னிக்க வேண்டுகிறேன்.

“One has no hope of breaking free of the cycle of life if one mistakenly yearns for the truth instead of the Truth”, argues this kural, albeit circularly.

All religions are, at their foundation, an attempt to explain the purpose of life.  At heart, they try to answer the two questions that animate any sentient life – “What is the meaning of life?” and as a corollary, “How does one life one’s life to achieve its purpose?”.  The rest is all mere embellishment; in marketing talk, differentiating elements.  This chapter, meiyunarthal, answers the first question.

In the three major religions arising from the sub-continent – Hinduism, Jainism and Buddhism,  the cycle of life  and the termination of this cycle are a core concepts. It is, therefore, important for one to realize this and spend one’s life contemplating the Ultimate Truth.  Once the Ultimate Truth is known, cycle of life terminates.  Therefore it is important for one to  have the discernment to separate what is an aspect of this Ultimate Truth and what is not.  If one wastes time on trivial truths, one is not only impeded in the progression towards nirvana, one actually regresses in that journey. 

There can be no arguments about the validity of not pursuing false goals.  However, my struggle with religion has always been at this point – most (all?) religions do not define how to identify this Ultimate Truth.  In the manner of seasoned academics, this is “left as an exercise to the student”.  One’s subjective realization is the only way to realize the Truth and if you are still in the cycle of life, well, you just have not realized it!  This kural and this chapter also do the same – the entire chapter is essentially a set of admonishments not to pursue the false truth with not a single word on how one identifies the, well, True Truth!

I do realize the limitation may entirely be mine and my lack of maturity in understanding.

PS: I have started a new endeavour and hence was not able to devote the requisite mind share to this “Daily Kural” project.  Hence it was interrupted for a period of 2 weeks.  I apologize for this interruption.  Also, until my day settles into a routine where I can guarantee the 60-90 minutes required to do this, the KFTD is likely to be irregular. Again, I apologize in advance for that.

68/1330

Image courtesy: http://pactiss.org/
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spiritual Matters, Asceticism, Realizing the Truth, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்
           
           
Blog link: http://kftd.blogspot.in/

Tuesday, August 7, 2012

90: Importance of welcome – வரவேற்பின் முக்கியத்துவம்


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து    

90    அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்
            Spiritual Matters, Domestic life, Hospitality

Moppak kuzhaiyum anicham muganthirinthu
Nokkak kuzhaiyum virunthu







அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும்.  ஆனால், தூரத்தில் வரும் விருந்தாளியை சற்றே முகம் சுளித்து பார்த்தாலே மனம் வதந்கிவிடும்” என்று சற்று மிகையாய் உவமையளிகிறது குறள்.

இல்லற வாழ்க்கையில் நமக்கு உள்ள பந்தங்களால் சில கட்டாயங்கள் நேர்கின்றன.  அவற்றில் உரிமையாய் நம் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரிப்பது சமூகத்தால் எதிர்பார்க்கப் படுவதும் ஒன்று.  இந்த அதிகாரம் அதைப் பற்றியதே.

எல்லா காலங்களிலும், எல்லா கலாச்சாரங்களிலும், விருந்தினர் வந்தால் இல்லத்தார் வாழ்கை கண்டிப்பாக பாதிக்கப்படும்.  எனவே, எல்லா காலங்களிலும், எல்லா கலாச்சாரங்களிலும் விருந்தினரை ‘கடவுள் போல’ உபசரிக்க வேண்டியது வலியுறுத்தப் பட்டிருக்கிறது. 

விருந்தாளிக்கும் இது தெரியும்.  எனவே அவர்கள் தங்கள் வருகை இல்லத்தாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்ற குறிப்பை உடனே உணர ஆவலாய் இருப்பார்கள். முதல் பார்வையில் அது இல்லை என்றால், அவர்கள் அங்கிருக்கும் முழு நேரமும் முள் மேல் இருப்பது போல் இருப்பார்கள். வேறு இடத்தில் தங்க முடியவே முடியாது என்றால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

விருந்தினர் நோக்கில் இல்லத்தாரிடம் அழைப்பு இல்லையென்றால் அது எவ்வளவு தர்ம சங்கடமான விஷயம் என்று உணர்த்தவே இந்த குறள். 

அனிச்ச மலர் நுகர்ந்தால் வாடுமா என்பது எனக்கு தெரியாது.  ஆனால் அவ்வளவு நாசுக்கான ஒரு மலர் வடநாட்டில் இருப்பது இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் ஒரு புலவர் கூகிள் உதவியின்றி அறிந்திருப்பது இரசிக்கதக்கது. இங்கு பரவலாக இருக்கும் தொட்டால் சிணுங்கியை  எதுகை-மோனை காரணனமாக உவமையாக உபயோகிக்க வில்லையோ என்னமோ!
 (ஓம்பு = உபசரிப்பு/பேணுதல்; அனிச்சம் = Scarlet Pimpernel (Anagallis arvensis Linn.) )
"If you inhale the smell a  delicate flower like the Scarlet Pimpernel too deeply, it can die. However, a guest will be crushed if the host just looks at him with no welcome in his eyes” compares the kural.

A family man has a lot of claims on his time and resources precisely because he is a family man.  When guests arrive to partake of his hospitality, the society expects him to receive and treat them well.  This chapter, virunthombal, outlines the expectations on the host when a guest arrives.

In any age, in any culture the arrival of a guest is a disruptive event.  Every culture, every age, correspondingly, has stressed the need to treat the arriving guest ‘as a God’.

Consider: the guest is completely vulnerable. He is banking on the host’s goodwill and sense of decency not to be rebuffed or insulted.  Hence he is very sensitive to any signal, real or imagined, from the host that he is welcome (or otherwise).  In that situation, if the host merely fails to project overt joy at his arrival the visitor is crushed.  If he goes so far as to show displeasure, then the rest of the visitor’s stay becomes an exercise in walking on glass, particularly if he has no other option.

So, the kural clearly captures the visitor’s point of view in the receiving hospitality.  It should be given freely and pleasantly.

It took me a reasonable amount of time to find out that the “anicham” mentioned in the kural refers to the Scarlet Pimpernel, even with Google.  Now, I don’t know if the scarlet pimpernel really dies if someone smells it.   What I found interesting was that a flower that is confined to Northern India & Europe is known to a poet deep in South India.   His information is accurate enough to tell him that it is a fragile flower.  Sure, he could have used the common Touch-me-not as a metaphor for shrinking behaviour but perhaps he was constrained by the requirements of metre and rhyme!

67/1330

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spiritual Matters, Domestic life, Hospitality, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்
           
Blog link: http://kftd.blogspot.in/

Sunday, August 5, 2012

467: Look before you leap – நில்! யோசி! செய்!


எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
     
467   பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5
            Material Matters, Governance, Strategic Clarity

Yennith thuniga karumam thunithapin
Yennuva, yenbathu izhukku






நினைத்ததை முடிப்பதெப்படி என்று குறள் கூறும் வழி இது:

“ஒரு காரியத்தை தொடங்கும் முன்னே அதில் வெற்றி கொள்ள என்ன தேவை, அது நம்மால் முடியுமா, அதில் கிடைக்கும் ஊதியம் போதுமா, இது தேவைதானா என்று தீர யோசித்து, ஆராய்வன ஆராய்ந்து திட்டம் வகுக்க வேண்டும்.  செயல் தொடங்கிய பின் சந்தேகதிற்கோ தயக்கதிற்கோ இடம்கொடுக்க வேண்டாம்;  ஆராய்ச்சி சரியாக இருந்தால், வெற்றி நிச்சயம்.  எனவே,  வேலையை தொடங்கியபின்  தயங்குவதோ, தடுமாறுவதோ மூடத்தனம்.”

“ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள்” என்று வள்ளுவர் கூறுவன ஏராளம்.  (அவை எல்லாம் ஒரே அரசனிடம் உறை கொண்டிருந்தால் அந்த நாடு மிகவும் அதிர்ஷ்டம் செய்தது!)  அவற்றில், இந்த அதிகாரம் ஒரு செயலை செய்யும்முன் ஆராய்ந்து செய்வது பற்றியது.

ஒரு முயற்சியில் இறங்கும் முன்னே ஆழ்ந்து, நிதானமாக சிந்திக்க வேண்டும்.
“என்ன காரியம்”?”,
“ஏன் செய்கிறோம்?”,
“இதனால் என்ன இலாபம்?”,
“என்ன இழப்பு வரலாம்?”,
“என்ன பலன்?”,
“என்ன குறுக்கீடுகள் வரும்?”,
“அவற்றை வெல்ல சாம, தான, பேத, தண்டம் போன்ற உபாயங்களில் எது சிறந்தது?”,
“எது இதை செயல்படுத்த சிறந்த காலம்?”,
“யாரால் இதை செய்ய முடியும்?”,
“இதுபற்றி அறிஞர்களின் ஆலோசனை என்ன?”,

என்று பல்வேறு கோணங்களில் ஒரு சிந்தித்து.  “இதைச் செய்ய வேண்டும்”, அல்லது “இதை செய்ய வேண்டாம்” என்று முடிவெடுக்க வேண்டும். 

முடிவெடுத்த பின் இவற்றை பற்றி சிந்திக்க நேர்ந்தால், நம் ஆராய்ச்சியில் குறையுள்ளது என்றும், வெற்றி சற்று கடினம் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். 
இது, செயல் தொடங்கிய பின் நமது யுக்திகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலகுவாக   வளைந்துகொடுக்கும் தன்மை (flexible) உடையதாக இருக்கவேண்டிய அவசியத்தை மறுதலிக்கவில்லை.  கோட்பாடுகளில் தெளிவு இருக்க வேண்டும், செயற்திட்டம் திண்மையாக இருக்க வேண்டும் என்றே குறள் கூறுகிறது.

The recipe for success, according to this kural, is very simple. 

“Think about all the aspects of an endeavour and firm up your strategy before you initiate action on it.  Once action is initiated, do not give room to doubt.  If you have done your analysis correctly, success is certain.  Hence, entertaining doubt at that stage is shameful”

The list of qualities that Valluvar considers essential to a ruler is exhaustive. It is a very lucky country indeed if all these qualities are present at the same time in one king!  One of the most important qualities that a king must have is the ability to strategize in order to achieve a goal.  The thesis of this chapter, therinthuseyalvagai, is about the dimensions that ability.

Before setting out on a journey to achieve a goal, the executive should consider the various dimensions of the quests.  She should have the analysed and researched the problem completely and should have convincing answers to questions like:
“What is the purpose of this quest?”
“What are the benefits?”
“What are the risks?”
“Can I afford to take up this job?”
“What do experts say about this?”
“What is the best strategy to realize this objective?”
“What obstacles can I expect in completing this?”
“How do I respond?”
“What resources do I need?”
“Who is the best person to execute this?”
Once the analysis is complete, she takes a clear “Go” or “No go” decision.

If the decision is “Go”, then all her focus should be on implementing the chosen strategy instead of second guessing herself and entertaining doubts about the core principles.  If she does have to question core beliefs, she also has to understand that her analysis was incomplete and success is uncertain.

It is to be noted that this kural does not negate the need to be flexible in one’s tactics depending on what the circumstances are while executing a plan.  What it requires is strategic clarity.

66/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Governance Strategic Clarity, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5 


Blog link: http://kftd.blogspot.in/