Sunday, August 5, 2012

467: Look before you leap – நில்! யோசி! செய்!


எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
     
467   பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5
            Material Matters, Governance, Strategic Clarity

Yennith thuniga karumam thunithapin
Yennuva, yenbathu izhukku






நினைத்ததை முடிப்பதெப்படி என்று குறள் கூறும் வழி இது:

“ஒரு காரியத்தை தொடங்கும் முன்னே அதில் வெற்றி கொள்ள என்ன தேவை, அது நம்மால் முடியுமா, அதில் கிடைக்கும் ஊதியம் போதுமா, இது தேவைதானா என்று தீர யோசித்து, ஆராய்வன ஆராய்ந்து திட்டம் வகுக்க வேண்டும்.  செயல் தொடங்கிய பின் சந்தேகதிற்கோ தயக்கதிற்கோ இடம்கொடுக்க வேண்டாம்;  ஆராய்ச்சி சரியாக இருந்தால், வெற்றி நிச்சயம்.  எனவே,  வேலையை தொடங்கியபின்  தயங்குவதோ, தடுமாறுவதோ மூடத்தனம்.”

“ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள்” என்று வள்ளுவர் கூறுவன ஏராளம்.  (அவை எல்லாம் ஒரே அரசனிடம் உறை கொண்டிருந்தால் அந்த நாடு மிகவும் அதிர்ஷ்டம் செய்தது!)  அவற்றில், இந்த அதிகாரம் ஒரு செயலை செய்யும்முன் ஆராய்ந்து செய்வது பற்றியது.

ஒரு முயற்சியில் இறங்கும் முன்னே ஆழ்ந்து, நிதானமாக சிந்திக்க வேண்டும்.
“என்ன காரியம்”?”,
“ஏன் செய்கிறோம்?”,
“இதனால் என்ன இலாபம்?”,
“என்ன இழப்பு வரலாம்?”,
“என்ன பலன்?”,
“என்ன குறுக்கீடுகள் வரும்?”,
“அவற்றை வெல்ல சாம, தான, பேத, தண்டம் போன்ற உபாயங்களில் எது சிறந்தது?”,
“எது இதை செயல்படுத்த சிறந்த காலம்?”,
“யாரால் இதை செய்ய முடியும்?”,
“இதுபற்றி அறிஞர்களின் ஆலோசனை என்ன?”,

என்று பல்வேறு கோணங்களில் ஒரு சிந்தித்து.  “இதைச் செய்ய வேண்டும்”, அல்லது “இதை செய்ய வேண்டாம்” என்று முடிவெடுக்க வேண்டும். 

முடிவெடுத்த பின் இவற்றை பற்றி சிந்திக்க நேர்ந்தால், நம் ஆராய்ச்சியில் குறையுள்ளது என்றும், வெற்றி சற்று கடினம் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். 
இது, செயல் தொடங்கிய பின் நமது யுக்திகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலகுவாக   வளைந்துகொடுக்கும் தன்மை (flexible) உடையதாக இருக்கவேண்டிய அவசியத்தை மறுதலிக்கவில்லை.  கோட்பாடுகளில் தெளிவு இருக்க வேண்டும், செயற்திட்டம் திண்மையாக இருக்க வேண்டும் என்றே குறள் கூறுகிறது.

The recipe for success, according to this kural, is very simple. 

“Think about all the aspects of an endeavour and firm up your strategy before you initiate action on it.  Once action is initiated, do not give room to doubt.  If you have done your analysis correctly, success is certain.  Hence, entertaining doubt at that stage is shameful”

The list of qualities that Valluvar considers essential to a ruler is exhaustive. It is a very lucky country indeed if all these qualities are present at the same time in one king!  One of the most important qualities that a king must have is the ability to strategize in order to achieve a goal.  The thesis of this chapter, therinthuseyalvagai, is about the dimensions that ability.

Before setting out on a journey to achieve a goal, the executive should consider the various dimensions of the quests.  She should have the analysed and researched the problem completely and should have convincing answers to questions like:
“What is the purpose of this quest?”
“What are the benefits?”
“What are the risks?”
“Can I afford to take up this job?”
“What do experts say about this?”
“What is the best strategy to realize this objective?”
“What obstacles can I expect in completing this?”
“How do I respond?”
“What resources do I need?”
“Who is the best person to execute this?”
Once the analysis is complete, she takes a clear “Go” or “No go” decision.

If the decision is “Go”, then all her focus should be on implementing the chosen strategy instead of second guessing herself and entertaining doubts about the core principles.  If she does have to question core beliefs, she also has to understand that her analysis was incomplete and success is uncertain.

It is to be noted that this kural does not negate the need to be flexible in one’s tactics depending on what the circumstances are while executing a plan.  What it requires is strategic clarity.

66/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Governance Strategic Clarity, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை5 


Blog link: http://kftd.blogspot.in/

No comments:

Post a Comment