கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்..
279 அறத்துப்பால்,
துறவறவியல், கூடாவொழுக்கம்
Spirituality, Asceticism, Insincere
morals
Kanaikodithu yaazhkodu sevvithuaang kanna
Vinaipadu paalaal kolal

திருக்குறளிலும் சரி, நான்
அறிந்தவரையில் இந்து மத கோட்பாடுகளிலும் சரி, முக்தி அடைவதற்கு துறவறம் மட்டுமே
வழி என்று சொல்லப்படவில்லை. பார்க்கப்
போனால் சிறந்த இல்வாழ்கையே உசிதம் எனக் கூறுவதாய் பல கதைகள் உள்ளன. (“கொக்கென்று
நினைத்தாயோ கொங்கணவா” என்று இல்லத்தரசி துறவியை இகழும் கூறும் கதை நாம்
அறிந்ததே). இப்படியிருக்கையில் துறவு
கோலம் பூண்டால் ஒழுக்கம் மிக அவசியம்.
அப்படி ஒழுக்கம் பேண முடியாத துறவிகளைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் “கூடாவோழுக்கும்”.
போலிச்
சாமியார்கள் மலிந்த இந்தக் காலத்திலே இந்தக் குறள் சொல்லும் அறிவுரை மிகவுக்
முக்கியமானது. ஒரு நித்யானந்தா இவ்வளவு செய்த
பிறகும் அவனுக்கு பின் இவ்வளவு ஆதரவாக இவ்வளவு
பெரிய ஏமாளிக் கூட்டம் இருக்கிறதென்றால் மக்கள் சொற்களுக்கே மதிப்பு
கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆங்கிலத்தில்
பில் காலின்ஸ் (Phil
Collins) பாடும்
பாட்டில் ஒரு கிறிஸ்துவ சாமியார் “நான் சொல்வதைச்
செய். செய்வதைச் செய்யாதே” என்று கூறுவதாய் ஒரு வரி உண்டு. அது எல்லா போலிச் சாமியார்களுக்கும்
பொருந்தும். இந்தக் கபடதாரிகளைக்
கண்டுபிடிக்க இவ்வளவு எளிதான வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தெரிந்திருந்தும் இவர்கள் தழைப்பது எப்படி என்பது தருமனையே குழப்பும் புதிர்!
“An arrow, though straight, is by
action an evil thing because it
kills. A harp, though crooked in
appearance, is by action good because of beautiful the music it produces. Similarly, ascetics and hermits should be
judged, not by their appearance but by the consequences of their actions” is
the practical advice of this kural.
Nowhere in
the Thirukkural (and as far as I know, in Hinduism in general) is asceticism a requirement
for salvation. Any normal householder, as long as he or she adheres to the
dharma of a householder, can attain salvation.
Indeed, there are treatises that advocate the householder’s path as the
best and easiest path to nirvana. (It is
another matter that the ‘normal’ householders (grihastas) are the economic
engine which sustains a society where ¾ of the population by class is engaged
in non-productive activities – brahmacharis, Vanaprasthas and Sanyasis!) In
that situation, a person choosing a hermit’s path to salvation has to match his
actions to his stated goal of renunciation.
This chapter, koodaaozhukkam, warns the readers against false ascetics whose
demonstrated morals do not match their lofty goals.
The advice
imparted by the kural is very relevant today, when every religion has its
evangelists ready to part you from your money in return for guaranteed
rapture. One only has to look at the
likes of the currently infamous Nithyananda, who was caught with his vesti down,
literally. Despite that he still
commands a huge following who still hail him as a god head. It is a wonder to me why these people are so
gullible. (This pattern of exposure of false
god men with very little effect on the faith of their followers has been
repeated in every culture in the world. We are in no way unique in this!)
All we have
to do to judge these god men is to judge them by the consequences of their actions
– bad outcomes imply bad god men. For
too long have we followed preachers, ( like the one in the Phil Collins’ song who
bawls “Don’t do as I dooo; just do as I saaaay”), unquestioningly in a manner
which would make sheep proud. Just use the
simple litmus test advocated by this kural and you will never be fooled by
another false god-man of any ilk. (Somehow,
I doubt that that will happen.)
Either this
2000 year old advice is easier to read than to follow or people are just plain
stupid!
48/1330
Image courtesy: http://www.indiamike.com/india/yoga-spirituality-and-religion-in-india-f54/sadhus-t4123/
Tags: Daily, KFTD, kural, Kural
for the Day, Spirituality, Asceticism, Insincere morals, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், அறத்துப்பால்,
துறவறவியல், கூடாவொழுக்கம்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment