தன்துணை இன்றால் பகையிரண்டால்
தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
875 பொருட்பால்,
நட்பியல், பகைத்திறந்தெரிதல்
Material Maters, Friendship, Handling
Enemies
Thanthunai indraal pagaiyirandaal thaanoruvan
Inthunaiyaak kolgavatrin ondru

வள்ளுவர் கூறும் ‘நட்பியல்’ வெறும்
மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் உறவை
பற்றியும் விளக்குகிறது. இந்த “பகைத்திறந்தெரிதல்” என்னும் அதிகாரம், பகைமையை
தவிர்க்க அறிவுரை கூறி, அது தவிர்க்க முடியாமல் போனால், எப்படி சமாளிப்பது என்று சொல்கிறது.
நான் அறிந்து சாதாரணமாக சாணக்கிய
நீதியில் கூறி இருப்பது, “எதிரிக்கு எதிரி நண்பன்” என்பதே. இந்தக் குறள் அதை மீறி பகைவனையும் நண்பனாக்க
விழைகிறது. சமீபத்திய போர் நீதி கூறுவதும்
இதையேதான் – ஒரே நேரத்தில் இரண்டு முனையில் போர் செய்யக்கூடாது. இது இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கண்கூடாகக்
கண்டதே. இரு பகைவர்களில் ஒருவரை நண்பனாக்கிக் கொண்டால் பலத்திற்கு பலம்,
பிரச்சினையும் பாதியாகிறது. வீரம் வேறு,
விவேகம் வேறு என்று அழகாய், யதார்த்தம் குன்றாமல் உணர்த்தும் குறள் இது.
“When you
have two enemies and you are alone, without the ability or the alliances to
withstand their attack, the smart move is to make all efforts to convert one of
them into a dear friend” – this is how the kural solves the puzzle of a king
caught on the horns of a dilemma.
The
Friendship that Valluvar talks about in the Thirukkural is not only about
individuals – it also talks about friendship between nations, probably more
correctly translated as alliances. In
the section talking about such friendships, this chapter, pagaithiranarithal,
advocates avoidance of conflict where possible, specifically when one is
weak. When that fails, the chapter also
gives some practical advice on handling that too.
“An enemies’
enemy is my friend” is a well-known adage attributed to Chanakya. This kural addresses a slightly different situation
– when an enemy is joins hands with his friend.
It is never a good idea to open conflicts on two fronts as Hitler found out
to his loss in World War II. Hence, the
kural solves it by advising one to convert one of them into a friend thereby converting
it to situation of “A friend’s enemy is an enemy of mine too”. This halves the problem while strengthening
one’s situation. It is also a better
situation than hiring mercenaries as there is an alignment of objectives unlike
what happened in Scotland where the Scots invited trouble in their fight
against Saxons by hiring mercenaries.
This is a very practical kural, particularly in a warlike culture
which considered a wound on the back as a mark of shame even if it was acquired
because of an arrow penetrating through the torso from the front!
49/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Maters,
Friendship, Handling Enemies, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால்,
நட்பியல், பகைத்திறந்தெரிதல்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment