தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
266 அறத்துப்பால்.
துறவறவியல், தவம்
Spirituality, Asceticism, Penance
Thavanjeivaar thankarumanj seivaarmatr trellaar
Avanjeivaar aasaiyut pattu

துறவறவியல் என்பது உய்விற்கு ஒரு
வழி. ஆனால், செய்ய முனைவதை வெற்றிகரமாக செய்து
முடித்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். வெறும் முயற்சிக்கு ஏதும்
மதிப்பில்லை. மேலும் அசல் துறவிகளுக்கும்
போலிகளுக்கும் சதாரனமானவர்கள் வித்தியாசம் காண்பது கஷ்டம். அதனால் அது சறுக்கம்
நிறைந்த வழி. அந்த வழியில் போகும் துறவிகளுக்கு தவம் ஒரு இன்றியமையாத செயல். “தவம்” என்றால் தம் உடலுக்கு வரும் கஷ்டங்களை
தாங்கி பிறருக்கு தொல்லை தராமல் இருப்பதே என்று இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே
அருதியிடப்பட்டுள்ளது.
ஆசையால் உந்தபட்டால் அது தவமில்லை, அவம்
என்றும், தவம் செய்பவர் செய்தால் அது கருமம் என்றும் கூறுவது குழப்பமாகத்
தோன்றும். இதன் உள்ளர்த்தம் பிறவிப் பலனில்
உள்ளது. தவம் வெறும் உடல் வருத்தம்
சார்ந்ததன்று. அதன் குறிக்கோள் மாயையை
வென்று நிர்வாணமடைவதே. அதனால்தான் அது
துறவிக்கு கடமையாகிறது. அதனால்தான்
அவர்கள் ஆசையினால் வழி தவறுவதில்லை. இது
அன்றி, “தவத்தால் இது கிடைக்கும்” என்றோ, “அவர் செய்கிறாரே, நாமும் செய்வோம்”
என்று இலக்கிலாமல் செய்தாலோ அது தவமாகாது.
முதிர்ச்சியின்மையையே குறிக்கும்.
இந்தக் குறள் இலக்கிய நோக்கில்
சாதாரணமாக இருந்தாலும், அதில் தொக்கியிருக்கும் அர்த்தம் மிகச் சிறந்தது.
(அவம் = பயனற்றது, தீங்கு)
“Only ascetics
who undertake proper penances would be able to perform their duties. The penances of others, who are lead astray
by desire, will only lead to disaster” says this kural, in what appears to be circular
logic.
Before
examining the import of the kural, a few words about the section –
thuravaraviyal. This refers to asceticism as a means of attaining the Ultimate
Truth. As I have said earlier, this is
not a necessary condition for salvation and is inherently a difficult
path. The chosen way is very difficult and
does not condone any slippage – success only comes to those who are able to
stay on the path, whatever the cost. On
the other hand, for a lay person, it is very difficult to differentiate between
a true ascetic and a charlatan. Hence it
is a very slippery route to deliverance.
However, for those hardy souls who have chosen this way, doing penance
is an essential part of their activities. This very chapter, thavam, defines such
penance as being able to withstand
bodily punishment while ensuring that one causes no harm to anybody.
The resolution
to the apparent circularity in the logic lies in the belief that one’s action
affects one’s path and even salvation. For
a true ascetic, the goal is nirvana. The
penance that is undertaken is way to reach that goal and hence the said ascetic
performs it as a duty without getting distracted by desires. For a false ascetic, however, the penance
becomes the goal. The motivation is not moksha but transient pleasure like
praise from others for being an ascetic or attaining something other than
salvation. The diversion to minor goals
of so powerful a tool like penance only indicates the immaturity of the person.
From a
literary standpoint, the kural is good but not remarkable. However from layers that are compressed in
those seven words, the kural is astounding.
50/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spirituality,
Asceticism, Penance, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், அறத்துப்பால்.
துறவறவியல், தவம்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment