Thursday, July 19, 2012

946: All the diseases love a glutton – மிகையாய் உண்டால் மிகவும் ஆபத்து


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

946   பொருட்பால், நட்பியல், மருந்து
             Material Matters, Friendship, Medicine

Izhivarinthu unbaankann inbampol nirkkum
Kazhiper iraiyaankann noi







எவ்வளவு உண்டால் போதும் என்று அளவறிந்து அவ்வளவே உண்பவனிடம் நோய் அண்டாததால் இன்பம் நிலைத்து நிற்கும்.  ஆனால்  தேவைக்கு மேல் மலைப்பாம்பு இரை உண்பது போல் சாபிடுபவனிடம் நோய் விலகாது நிற்கும்” சாப்பிடும் அளவே நோய்க்கு மூலகாரணம் என்று உரைக்கிறது குறள்.

வள்ளுவர் நட்பியலில் பல்வேறு தீய பழக்கங்கள் குறித்து விரிந்துரைக்கிறார்.  ஒரு மாறுதலுக்கு இந்த அதிகாரத்தில் நோய் பற்றியும் அவற்றை குணப்படுத்தும் வழிகள் குறித்தும் விவரிக்கிறார்.

இப்பொழுது அளவாக உண்பது பற்றி அறிவுரை செய்யாத மக்கள் தொடர்பு மார்க்கமே இல்லை. அதிகம் உண்டால் நேரும் உடல் உபாதைகள் நிறைய உள்ளன என்பதும் நாம் அறிந்ததே.  அதனால் இந்தக் குறளைப் படித்ததும் “இதைக்கூட சொல்ல வேண்டுமா வள்ளுவர்?” என்று தோன்றலாம்.   இதில் கவனிக்க வேண்டியச விஷயம்  வள்ளுவர் இதை எழுதிய காலம். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நோய் வாதம், பித்தம் போன்ற சுரப்புகளின் குறை-நிறைகளால் வருகிறது என்று எல்லோரும் நினைத்த காலத்தில், வள்ளுவர் அளவாய் உண்பதின் அவசியத்தைகூறியிருக்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்திலேகூட அதிகம் உண்பவனை “சாப்பாட்டு ராமன்” என்று சற்றே பொறாமை கலந்து அழைப்பார்கள். நன்றாய் சாப்பிட்டால் உடம்பு நன்றாய் இருக்கும்; குண்டாய் இருப்பவன் பலசாலி, ஆரோக்கியம் உள்ளவன் போன்ற கருத்துக்களும் பரவலாய் இருந்தேன்.  இவ்வளவு சமீபமாய் இவ்வளவு தவறான எண்ணங்கள் இருந்தன என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் எழுதியதில் உள்ள நுண்ணறிவு தெளிவாகிறது.  இது பைபிளிலும் ஒரு பாவமாக கூறப் பட்டிருக்கிறது.

இலக்கிய நோக்கில் இரையான் என்ற சொற்பிரயோகதின் மூலம் வள்ளுவர் ஒரு பெரிய இரையை உண்டு கிடக்கும் மிருகத்தை நம் கண்முன்  நிறுத்துகிறார்.  அந்த உருவகத்தின் வாயிலாகவே அதில் உள்ள தீமையையும் உணர்த்துகிறார்.

(இழி= அளவு; கழி = நிறைய)

A man who eats the right amount will always be happy as he will never be troubled by disease.  A glutton, on the other hand, will always be sick” says the kural, highlighting the long term benefits of a good diet.

In the section on friendship, Valluvar talks about various bad habits and evil actions and cautions against them generally.  Presumably this is because evil requires company.  In this chapter, marunthu, he changes pace a bit and talks about causes of diseases and the various ways of preventing them.

Today, there is a veritable media blitz on the evils of over-eating and the benefits of a good diet.  If you have not been living under a rock in the last 20-25 years, you know that gluttony is not only a sin but is also bad for your health.   Therefore the first reaction on reading the kural could be “Why is Valluvar talking about such an obvious thing?  Was he just filling up the count to 1330?”  One should realize that it is with the benefit of hindsight.

Even when I was a boy, a trencherman was admired. Eating well, and a bit more, was the ticket to health and strength.  Keeping in mind these erroneous attitudes were prevalent as recently as 30 years ago, our appreciation for the wisdom expressed in the kural increases.   Remember, this was a time when it was thought that disease were a result of imbalance of the various kinds of humours like bile, phlegm etc.  (Valluvar himself says this in the first kural in this chapter).  Therefore, to me, the insight on the benefits of a restricted diet is astounding.

58/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material Matters, Friendship, Medicine, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால், நட்பியல், மருந்து

Blog link: http://kftd.blogspot.in/

No comments:

Post a Comment