பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
1276 காமத்துப்பால்,
கற்பியல், குறிப்பறிவுறுத்தல்
Sexuality, Post Marital Love,
Signalling
Perithaatrip petppak kalathal arithaatri
Anbinmai soozhva thudaithu
“இவர் என்னை பிரிந்து விடும் துன்பம் எனக்கு
வருவது மிகவும் அரிது என்று எண்ணி இருந்தேன். ஆனால் இப்படி என்னை பெரிதும் மகிழ்விக்குமாறு
கூடுகிறாரே இவர்? சீக்கிரமே பிரியப்
போவதால் தானோ? அப்படியென்றால், இது
இவருக்கு அன்பில்லாமையை தானே குறிப்புணர்த்துகிறது?” என்று தலைவி அதிகமாய்
ஆராய்வதாக உள்ளது குறள்.

இந்தக் குறளுக்கு என் விளக்கம் சரிதானா
என்று எனக்கு சந்தேகமாய் உள்ளது. வார்த்தைகள் புரிந்தாலும், குறளின் உள்ளர்த்தம்
என்ன என்று எனக்கு தெளிவாகவில்லை. என் சந்தேகம் என்னவென்றால், கூடுதலில் உள்ள
வித்தியாசத்தை உணர்ந்து தலமைகள் தலைவன்
பிரியபோகிறான் என்று குறிப்பறிந்து கொள்கிறாளா அல்லது, மகிழ்ச்சி மிகுதியால் வீணே
கவலைப் படுகிறாளா?
(இதற்கு மூன்றாவதாய் ஒரு விளக்கமும்
உள்ளது: “இந்தக் கூடலின் மகிழ்ச்சியால், இதற்கு முன் இவர் அன்பில்லாமையால் வந்த
பிரிவுத்துயரத்தை தாங்கிக்கொள்ள முடிகிறது” என்பதே. ஆனால், அதில் ‘குறிப்பு’ இல்லாததால், நான்
ஏற்கவில்லை.)
தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் தயவு
செய்து விளக்குங்கள்.
(பெட்பு = விருப்பம்)
“I always
thought that the pain of separation will be rare with this man. Now, he has raised my joy in this act of
union to such peaks, I fear that it is an indication that he is soon going to
part from me. If so, this ecstasy is
only an indication of his fundamental lack of love for me” says the suspicious
wife, of the signal implicit in the great sex with her husband.
A married couple’s relationship is
built more on signals that evolve over time rather on than on mere verbal
communication. This chapter, kuripparivuruthal, talks about such signalling
between couples.
While I understand the words of this
kural, I am not able to gauge the mood behind them. I am not sure if the kural is about a signal
correctly received by the wife about the impending parting based on the sheer
intensity & ecstasy in the love making. Or if she is perceiving a false
signal from the husband just because the love making is so great.
(There is a third interpretation: “The heights achieved by this
act of union enable me forget the pain caused by the parting which was a direct
result of his lovelessness”. However,
since there is no signalling in that, I reject it.)
I would be glad to be guided by
anybody who knows.
64/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Post
Marital Love, Signalling, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், காமத்துப்பால்,
கற்பியல், குறிப்பறிவுறுத்தல்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment