முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
1239 காமத்துப்பால்,
கற்பியல், உறுப்புநலனழிதல்
Sexuality,
Marital Love, Atrophying Organs
Muyakkidaith thannvali pozhap pasappatra
Pedai perumazhaik kann

பிரிவினால் வரும் மன உளச்சலை பற்றி
பலரும் பாடியிருக்கின்றனர். ஆனால்,
வள்ளுவப்பெருமான் பிரிவால் உடல் அழகு குலைவதைப் பற்றி இந்த அதிகாரத்தில்
பாடியிருக்கிறார்.
காதலின் தாக்கத்தை விளக்க சற்று
மிகையாய் உவமை அளிப்பது சகஜமாய்
நடப்பதே. இந்த குறளில் ஒரு செயலுக்கும்
அதன் காரணதிற்க்கும் இருக்கும் கால இடைவெளி மூலமாக காதலின் நெருக்கத்தையும்,
பிரிவின் வலியையும் குறிப்பரிவிக்கிறார் புலவர்.
காற்றே புக முடியாத அளவிற்கு தழுவிக்கொண்டிருக்கிறார்களாம்;
அவளுக்கு வலிக்குமே என்று காதலன் கொஞ்சம் நகர்ந்ததால் காற்று
புகுந்துவிட்டதாம். அது குளிர்
காற்றானதால் காதலி உணர்ந்துவிட்டாளாம். உடனே,
அந்தக்ஷணமே பிரிவாற்றாமை தாக்கி, பசபுற்று கண்ணீர் வடிக்கிறாளாம்!
நடைமுறையில் நடக்காது என்றாலும், அதன்
காரணத்தினாலேயே காதலின் ஆழமும், காதலியின் துயரமும் வெகு அழகாக நம் கண்முன்
நிற்கின்றன.
(முயங்கு
=தழுவு; போழ்தல் = பிளத்தல்;
தண்வளி = குளிர் காற்று)
“When we were
entwined tightly in each other’s arms, a cool breeze sprung up and managed to
come between us. Unable to bear even
such a small parting, my love’s eyes have lost luster and have filled up with tears
like from a rain” describes the lover in
this kural.
World literature is rife with poems describing quite beautifully
the mental trauma caused by separation. Valluvar
takes a different tack and describes the physical effects of parting, in this
chapter, uruppunalamazhithal.
Any literature talking about love exaggerates. In fact, the exaggeration counter-points the storm
unleashed inside the lovers. Valluvar
uses the instantaneity of the physical reaction to underscore the love.
Just imagine:
The lovers are so entwined that there is no space for even
air between them. Fearing that he is causing pain, the lover relaxes just a
little bit, enabling the cool night air to get in between them. That parting, instantaneously causes a
physical reaction in his love – her eyes lose lustre and fill up with tears.
Sure it does not happen in reality. It probably cannot happen. But the very impossibility of the occurrence throws
into relief the intensity of the passion and the pain that the lovers feel at
parting.
54/1330
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality,
Marital Love, Atrophying Organs, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், காமத்துப்பால், கற்பியல்,
உறுப்புநலனழிதல்
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment