Showing posts with label Marital Love. Show all posts
Showing posts with label Marital Love. Show all posts

Tuesday, September 11, 2012

1253: Loving you is a reflex – என்னை மீறிய வேட்கை



மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
     
1253   காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்
            Sensual Matters, Marital Love, Losing Control

Maraippenmann kaamaththai yano kurippindrith
Thummalpol thondri vidum






“Propriety demands that I hide my lust. However it is beyond my voluntary control and, like a sneeze, bursts out without warning” says the woman, quite helplessly, in this kural.

Civilization is an ongoing struggle between desire and postponement of its fulfilment.  Yearning, especially in a woman, is typically expected to be expressed in private in most cultures.  By its very nature, lust breaks erases any veneer of control.  This chapter, niraiyazhithal, talks about losing control in a social sense.

Of all the bodily reflexes, a sneeze is the most involuntary.  When you gotta sneeze, you gotta sneeze!  Using that as a metaphor for lust breaking down a woman’s sense of decorum aptly conveys the extent of her yearning and her helplessness in fulfilling it.

The setting for the chapter is the nayaki expressing her helplessness in her desire to her friend.  I am astounded by the culture where such a topic is discussed so casually and explicitly.  This chapter and the others in the Thirukural clearly demonstrate the equality between the sexes, the mutual esteem, the fairness of the social norms, the permissiveness and the deep understanding of natural urges.  This is not unique to the Tamils.  I have seen this repeated in multiple English readings of other language literature.

The “Valentines Day” goons should actually understand what their culture is before going around beating up lovers in the name of “defending” it!

என்னுடைய காம வேட்கையை நாணம் கருதி அடக்கவே முயல்கிறேன் நான்.  ஆனால் அது, ஒரு தும்மல்போல் என்னுடைய ஆளுமைக்கு உட்படாமல் ஒரு அறிவிப்பும் இல்லாமல் பீறி வெளிப்பட்டு விடுகிறது” என்று தலைவியின் ஆற்றாமையை வெளியிடுகிறது இந்தக் குறள்.

நாகரிகம் என்பது இறுதியில் ஆசைகளை அடக்குவதே.  பெரும்பாலான கலாச்சாரங்களில் வேட்கை தனிமையிலேதான் வெளிபடுத்தப்படவேண்டும் என்பது முறை.  அந்த முறை முறிக்கபடுவதே இந்த அதிகாரத்தின் சாரம்.

உடலின் தனிச்சையான செயல்பாடுகளில் தும்மல் முதல் இடம் பெறுகிறது – அதை அடக்குவது மிக கடினம் ஏனெனில் அது முன்னறிவிற்பின்றி தோன்றிவிடும்.  காமத்தின் பிடியில் உள்ளவர்களுக்கு அவர்களின் வேட்கை பீறிட்டு வெளிப்படுவதை தும்மலை உவமையாக காட்டுவதன் மூலம் வள்ளுவர் அதன் வேகத்தையும், அடக்க முடியாத குணத்தையும் எளிதாக வெளிப்படுத்துகிறார்.

இந்த குறளும், இந்த அதிகாரமும் இந்திய கலாசாரத்தின் ஆழத்தை தெளிவாக அடிக்கொடிடுகின்றன.  இத்தகைய கருத்து இவ்வளவு சாதாரணமாக விவாதிக்கப் படுகிறது  என்றால், அந்த கலாசாரத்தில் ஆண்-பெண் இரு சாராருக்கும் உள்ள சமத்துவத்தையும், உடல்-மனம் சார்ந்த உந்துதல்களைப் பற்றிய சீரிய அறிவும் ஆழ்ந்த தெளிவும் புலப்படுகின்றன.  தமிழில் மட்டுமில்லை, நான் இந்தியாவின் மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்துள்ளேன், எல்லா மொழிகளிலும் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதைப் பார்த்தால், நாம் எவ்வளவு பின்னடைந்துள்ளோம் என்று வருந்தத்தோன்றுகிறது.  காதலர் தினத்தன்று “நம் கலாச்சாரத்தை காக்கிறோம்” என்று கூறிக் கொண்டு காதலர்களை  துன்புறுத்தும் குண்டர்கள் கூட்டம் சற்று நம் கலாச்சாரம்தான் என்ன புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.

72/1330


Tags: காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல், Sensual Matters, Marital Love, Losing Control, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Friday, July 27, 2012

1281: Difference between beer and the bed - கள்ளை விட காமம் மேலானது


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

1281    காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்
Sexuality, Marital Love, Longing for Love

Ullak kaliththalum kaana magizhthalum
Kallukkuil kaamathirk kundu






“கள்ளின் இன்பம் பெரிது என்று கூறும் குடிகாரர்கள் முட்டாள்கள்.  கள்ளை குடித்தால்தான் இன்பம்.  காமதிலோ, கூடினால் மட்டும்தான் இன்பம் என்றில்லை.  மனதால் நினைத்தாலும் மகிழ்ச்சி, கண்ணால் கண்டாலும் களிப்பு.” என்று காமத்தின் மேன்மையை தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது குறள்.

கணவனும் மனைவியும் ஆழ்ந்த காதலால் கூடலுக்கு ஏங்கும் தன்மையை விளக்கும் அதிகாரம் இது.  குறிப்பாக இந்தக் குறள், பிரிந்து போகும் தலைவனுடன் ஏன் கூட வில்லை என்று தோழி கேலி செய்யும் போது அதற்கு தலைவி கூறும் பதிலாக அமைந்துள்ளது.

பிரிவதையும் கூடுவதையும் விரசமின்றி, இரசனையுடன் காமத்துப்பாலில் வள்ளுவர் எழுதியுள்ளார்.  விரசமில்லாமல், கடைநிலை இரசனையை தாண்டி எழுதத் தெரியாதவர்களெல்லாம் ‘கவிப் பேரரசு’ என்று கூறிக் கொண்டு அலைவது சிரிப்பை வரவழிக்கிறது!

இந்தக் குறளில் கவனிக்க வேண்டியது புலவரின் சொற் பிரயோகமே – ‘களிப்பு’ என்று கூறுவதால் அது உணர்வு அழியாத இரசிப்பு என்று உணர்த்துகிறார். ‘மகிழ்ச்சி’ என்றால் ஒரு படி மேலே சென்று உள்ளத்திலிருந்து தனிச்சையாக வரும் உவகையை குறியீட்டுகிறார்.  இரண்டுமே தன்னிலை தவறாமல் அறிவார்த்தமாக இரசிக்கும் நிலை.  குடியில் உள்ள இன்பம் அறிவழிந்து, நிலை தவறுவதால் வரும் சிற்றின்பம்.    இது, அது இல்லை என்று இந்தச் சொற்க்களை தேர்ந்தேடுத்ததால் சொல்கிறார் வள்ளுவர்.

(புணர்ச்சி =கூடல், கலவி; விதும்பல் = ஏக்கம்)
பி.கு: 3-4 நாட்கள் குறள் பற்றி எழுதாததற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  என்னால் வலை தளத்தை அணுக முடியவில்லை.


Those that claim that alcohol is the ultimate pleasure are fools.  The pleasure in it is only experienced when drinking.  Sex is infinitely better.  You can enjoy the act and later relive it just by thinking about it.  In fact, merely seeing one’s beloved can make us experience the pleasure once again” says the kural, making a very strong case for why sex is better than alcohol.

The context of the kural is as an answer by the woman to her friend, who teases her for not making love to her husband who is departing.  The Thirukkural talks about the mutual yearning of a married couple to make love in this chapter, punarchchivithumbal.  Valluvar writes beautifully and tastefully about all the sensual aspects of a couple in his epic.

While it is beyond my meagre skills to convey in another language the depth of meaning that the bard loads into the verse by his mere choice of words, the enjoyment of this kural is greatly enhanced if one appreciates it. I will try to the best of my abilities …

Valluvar uses ‘kalippu’ (joy) and ‘magizhchi’ (happiness) to denote the pleasure felt in thinking about and seeing one’s beloved.   Both words indicate a pleasure that is experienced rationally and cognitively.  A drunk’s pleasure, on the other hand, depends on losing oneself and the absence of rational thought.  Therefore, by choosing the words that he does for talking about the pleasure in the longing for love and not for the drunken stupor, he clearly places it above the latter and underlines the baseness of alcohol induced joy.

PS: Apologies for the 3-4 day stoppage of KFTD; my ISP decided that I am on the internet too much!

62/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Marital Love, Longing for Love, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்

Blog link: http://kftd.blogspot.in/

Saturday, July 14, 2012

1239: Instant Effects – க்ஷண நேரப் பிரிவுகள்


முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

1239   காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்
            Sexuality, Marital Love, Atrophying Organs

Muyakkidaith thannvali pozhap pasappatra
Pedai perumazhaik kann





“ஆரத் தழுவிகொண்டிருக்கும் போது ஊடே குளிர்க்காற்று புகுந்தது.  அந்தச் சிறு பிரிவையும் தாங்க முடியாமல் அவள் கண்கள் நிறம் மாறி பெரு மழையாய் கண்ணிர் வடிக்கின்றன” என்று அழகாய் வருணிக்கிறார் வள்ளுவர்.

பிரிவினால் வரும் மன உளச்சலை பற்றி பலரும் பாடியிருக்கின்றனர்.  ஆனால், வள்ளுவப்பெருமான் பிரிவால் உடல் அழகு குலைவதைப் பற்றி இந்த அதிகாரத்தில் பாடியிருக்கிறார்.

காதலின் தாக்கத்தை விளக்க சற்று மிகையாய் உவமை அளிப்பது  சகஜமாய் நடப்பதே.  இந்த குறளில் ஒரு செயலுக்கும் அதன் காரணதிற்க்கும் இருக்கும் கால இடைவெளி மூலமாக காதலின் நெருக்கத்தையும், பிரிவின் வலியையும் குறிப்பரிவிக்கிறார் புலவர். 

காற்றே புக முடியாத அளவிற்கு தழுவிக்கொண்டிருக்கிறார்களாம்; அவளுக்கு வலிக்குமே என்று காதலன் கொஞ்சம் நகர்ந்ததால் காற்று புகுந்துவிட்டதாம்.  அது குளிர் காற்றானதால் காதலி உணர்ந்துவிட்டாளாம்.  உடனே, அந்தக்ஷணமே பிரிவாற்றாமை தாக்கி, பசபுற்று கண்ணீர் வடிக்கிறாளாம்!

நடைமுறையில் நடக்காது என்றாலும், அதன் காரணத்தினாலேயே காதலின் ஆழமும், காதலியின் துயரமும் வெகு அழகாக நம் கண்முன் நிற்கின்றன.

(முயங்கு =தழுவு; போழ்தல் = பிளத்தல்; தண்வளி = குளிர் காற்று)

When we were entwined tightly in each other’s arms, a cool breeze sprung up and managed to come between us.  Unable to bear even such a small parting, my love’s eyes have lost luster and have filled up with tears  like from a rain” describes the lover in this kural.

World literature is rife with poems describing quite beautifully the mental trauma caused by separation.  Valluvar takes a different tack and describes the physical effects of parting, in this chapter, uruppunalamazhithal.

Any literature talking about love exaggerates.  In fact, the exaggeration counter-points the storm unleashed inside the lovers.  Valluvar uses the instantaneity of the physical reaction to underscore the love.

Just imagine:

The lovers are so entwined that there is no space for even air between them. Fearing that he is causing pain, the lover relaxes just a little bit, enabling the cool night air to get in between them.  That parting, instantaneously causes a physical reaction in his love – her eyes lose lustre and fill up with tears.

Sure it does not happen in reality.  It probably cannot happen.  But the very impossibility of the occurrence throws into relief the intensity of the passion and the pain that the lovers feel at parting.

54/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Sexuality, Marital Love, Atrophying Organs, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்


Blog link: http://kftd.blogspot.in/