தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
510 பொருட்பால்,
அரசியல், தெரிந்துதெளிதல்
Spiritual Matters,
Governance, Recruitment
Theraan thelivunth thelinthaankann aiyuravum
Theera idumbai tharum
“தகுதி இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்தல், தீர
ஆராய்ந்து ஒருவரை “தகுதியானவர்தான்” என்று நிர்ணயித்து தேர்ந்தெடுத்து அதன்பின்
அவரை நம்பாமல் சந்தேகப்படுவது, இரண்டுமே தீராத கஷ்டத்தை தரும்” என்று தேர்வுக்கு
ஒரு முடிவு வகுக்கிறது குறள்.
எந்த செயலையும் செவ்வனே செய்து முடிக்க
ஒரு குழு தேவைப்படும். அந்தக்குழுவில்
பல்வேறு விதமான ஆற்றல் கொண்டவர்களை தலைவன் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களை தேர்ந்தெடுக்கும்போது மனதில் கொள்ள
வேண்டிய நியமங்களை விவரிக்கும் அதிகாரம் இது.
திருக்குறளில் பல்வேறு இடங்களில்
இழையோடும் உணர்ச்சி இது – முடிவெடுத்தபின் குழம்பாமல் செயலுக்கே முக்கியத்துவம்
கொடுக்கிறார் வள்ளுவர். இந்த அதிகாரத்தில்
எப்படி ஒருவரை சோதிப்பது, அப்படியெல்லாம் சோதனை செய்யும் போது நிதானத்தையும், நடுநிலையையும்,
ஆராய்ச்சி நோக்கையும் கைவிடாது இருப்பதன்
அவசியம் இவற்றையெல்லாம் வலியுறுத்துகிறார்
வள்ளுவர். இதன் மூலம் ஒரு வேலைக்கு ஆள்
தேர்ந்தெடுப்பதில் உள்ள முயற்சியை நம் கண்முன் நிறுத்துகிறார்.
இப்படியெல்லாம் சோதனை செய்து தேர்ந்தெடுக்கபட்டவர் தனது வேலையை
செய்யும்போது அவர்மேல் முழு நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அவருக்கு உற்சாகம்
குன்றும். அதனால் அவரது உற்பத்தி
குறையும். இதனால் தலைவருக்கு அவர் மேல்
நம்பிக்கை இன்னும் குறையும். அதனால் ... இந்த
சுழற்சிக்கு முடிவே இல்லை. இதை
ஆங்கிலத்தில் “self
fulfilling prophesy” என்று
கூறுவார்கள்.
சில வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க
பள்ளியில் நடந்த ஆராய்ச்சியை இங்கே கூறுவது பொருந்தும்: ஆராய்ச்சியாளர் தான்
இயற்றிய ஒரு சிறிய தேர்வின் மூலம் ஒரு வகுப்பில் எந்த குழந்தைகள் சிறப்பாக
படிப்பார்கள் என்று தன்னால் நிர்ணயிக்க முடியும் என்றார், இதை சோதிக்க பல
வகுப்புகளில் தேர்வு நடத்தி தலா இரண்டு
மாணவர்களை “இவர்களே சிறப்பாக படிப்பார்கள்” என்று உறுதியாக கூறினார். என்ன அதிசயம்?
அவர் தேர்வு செய்த இரண்டு மாணவர்களே 90 சதவிகிததிற்கு மேலாக சிறப்பாக படித்தார்கள். வகுப்பில் முதன்மையாக
வந்தார்கள். இது இந்த தேர்விற்கு முன் அவர்களின் செயல்பாடு எப்படி
இருந்திருந்தாலும் சரியாகவே இருந்தது. எப்படி பதினைந்து கேள்விகள் கொண்ட தேர்வு மூலம்
இவ்வளவு சரியாக சிறப்பான மாணவர்களை அடையாளம் காண முடிந்தது என்று வகுப்பு
ஆசிரியர்கள் கேட்ட போது உண்மை வெளியானது – எல்லா வகுப்புகளிலும் ஆராய்ச்சியாளர்
மாணவர்களை கண்போன போக்கில் (random)
தேர்ந்தெடுத்தார் அவரது தேர்வு ஒரு கண் துடைப்பே.
மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு ஆசிரியர்களின் எதிர்பார்ப்பே காரணம்!
(http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect) அதேபோல், சந்தேக கண்கொண்டு பார்த்தால், நல்ல மாணவரும்
சரியாக செயல்பட முடியாமல் போகும்.
வள்ளுவரின்
குறளும் இதையே நிலைநிறுத்துகிறது.
“Selecting an unqualified person and
not fully trusting a qualified person who has been properly selected – both of
these behaviours in a leader will lead to everlasting trouble” says this kural,
identifying when the selection process should end.
In this
chapter, therinthuthelithal, Valluvar outlines in some detail how to go about
selecting people for an assignment.
The other
couplets in this chapter talk about what are the considerations in selecting a
person, what are the pitfalls, what to look for, what to discount and such like
dimensions in the selection of a person.
This kural, the last, talks about the necessity for fully empowering the
selected candidate, once he or she has cleared the intensive selection
process. (As an aside, I personally
believe that the reversal of this attitude – selecting indiscriminately and
weeding out people on ‘performance’ – is the root cause for most of the ills
plaguing the Indian IT industry. I also
believe we are yet to see the worst effects of such a strategy.)
When the
leader does not trust the person who is selected after vigorous qualification
tests, it sets up a negative spiral. Since the candidate is, in a sense, gelded
by the lack of trust, his output naturally suffers. This reduced output reinforces the leader’s original
mistrust leading to a vicious cycle. This
is what Valluvar refers to as “everlasting trouble”.
A few years
ago, there was a very interesting experiment conducted by Rosenthal-Jacobson in
US schools. They claimed to have refined a 15 item questionnaire that can
predict the best performers in a class.
They were allowed to administer this questionnaire and they identified
the students “most likely to perform well”.
Very surprisingly, over 90% of the identified students were the best or
near the best of the students in their class, irrespective of their earlier
performance.
It turns out that the students most likely to perform well were selected randomly. It was the teacher’s expectations that the student will perform well that determined the student’s performance! Similarly, it is not hard to think that a good student’s performance can be destroyed by the lack of trust of a student (For more information, please lookup Pygmalion Effect. http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect)
It turns out that the students most likely to perform well were selected randomly. It was the teacher’s expectations that the student will perform well that determined the student’s performance! Similarly, it is not hard to think that a good student’s performance can be destroyed by the lack of trust of a student (For more information, please lookup Pygmalion Effect. http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect)
This kural
too reiterates the same effect – if a leader thinks somebody will fail, they
will certainly fail!
71/1330
Tags: பொருட்பால், அரசியல்,
தெரிந்துதெளிதல், Spiritual Matters, Governance, Recruitment,
Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural
for the Day
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment