Showing posts with label Management. Show all posts
Showing posts with label Management. Show all posts

Thursday, June 21, 2012

1061: Never Beg – பிட்சை கேட்காதே


கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
           
1061    பொருட்பால் குடியியல்- இரவச்சம்
Management- Citizenship – Fear of begging

Karavaathu unvantheeyum kannannaark kannum
Iravaamai kodi urum

Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/porut/1061.mp3 





ஈகை குறித்து பலவும் எழுதப்பட்டுள்ள திருக்குரளிலேயே பிச்சை கேட்பது  கேவலமானது என்ற கருத்தும் அதிலேயே (இந்த அதிகாரத்தில்) வலியுருத்தபட்டுள்ளது. கேட்பது அவமானமானாலும், கேட்டுக் கொடுக்காமலிருப்பது அதைவிட கேவலம் என்ற எண்ணமும் விரவியிருக்கிறது.

“நாம் போய்கேட்டால் மகிழ்ச்சியுடன், கஞ்சத்தனமில்லாமல், உடனே கொடுக்ககூடிய நல்லவ்ர்களிடமும் பிச்சை கேட்பதை விட கேட்காமல் இருப்பதே  கோடி மடங்கு நல்லது.” என்று கேட்பதில் உள்ள கேவலத்தை குறள் கூறுகிறது.

மேலெழுந்தவாரியாக பிச்சை கேட்காதே என்று மட்டும் கூறாமல், பிச்சை கேட்க அஞ்ச வேண்டும் என்று கூறுவதன் முலம் பிச்சை கேட்காமல் இருப்பதில் உள்ள பொறுப்பை கேட்பவரிடம் வைக்கிறார், வள்ளுவர்.  இதை ஔவையாரின் “பிச்சை புகினும், கற்கை நன்றே” என்ற கருத்துடன் ஒப்பிட்டால், கல்வியின் முக்கியத்துவம் நமக்கு புரியும்.

(கரவு = மறைத்தல்)

While extolling the importance of generosity and sympathy, the Thirukkural is also very clear that is disgraceful to beg.  It cautions that the very thought of begging should be feared, in this chapter, iravachcham.

The kural highlights the shame in begging thusly: “Even if the giver is such a nice person who would give cheerfully, generously and without being judgmental, it is a million times better not to ask them than to ask them”

By making begging an act to be feared and ashamed of, Valluvar shifts the onus on to the asker.  This weight of disgrace loaded onto the act of begging makes it even more shameful to refuse somebody when they do beg.  (“If despite it being such a painful, shameful, disgraceful act a person is forced to ask you, and you refuse, you are to be despised” is the underlying thought process).  The great poet, Avvaiyaar, has enjoined that “It is good to learn, even if it means you need to beg to be able to learn”.  This shows that begging has always been despised but also focuses attention on the importance of education.

It is ironic that in a country that has for long years despised begging, the iconic image of the country is a beggar. 



Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Management, Citizenship, Fear of begging, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  பொருட்பால்,  குடியியல், இரவச்சம்               


Blog link: http://kftd.blogspot.in/

35/1330

Tuesday, June 19, 2012

1017: Honour before life – மானம் உயிரினும் மேலானது


நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

1017    பொருட்பால் - குடியியல்-நாணுடைமை
            Management- Citizenship– Honour

Naanaal uyiraith thurappar uyirpporuttaal
Naanthuravaar naanaall bavar

Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/porut/1017.mp3

தம் செயல்கள் தம் குணங்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைப்பர் உயர்ந்தவர் .  அப்படி இல்லை என்றால் தம் செயல் குறித்து வெட்கப்படுவர்.    இந்த வெட்கம் இருப்பதே சான்றோருக்கு அடையாளம்.  இந்த வெட்கத்தின் அவசியத்தை உணர்த்தும் இந்த நாணுடைமை எனும் அதிகாரம்.

“நாணத்தின் சிறப்பரிந்து அதனை போற்றுபவர் தம் செயல் தம் நிலைக்கொவ்வாமல் வெட்கி தலை குனியும்படி இருக்கும் என்றால், தம் உயிரே போகுமேன்றாலும் அந்த செயலை செய்ய மாட்டார்.  கேவலம் உயிருக்காக தம் நாணத்தினை விட்டுக்கொடுக்க மாட்டார்.” என்று நாணமுடையவர்களின் எண்ணத்தை கூறுகிறது குறள்.

உடல் நோவு எப்படி நம் உடம்பு சரியாக இல்லை என்று உணர்துகிறதோ அதே போல் இந்த நாணம் நம் செய்கை சரியில்லை என்று உணர்த்துகிறது. நம்  மரியாதைக்கு பங்கம் ஏற்படுவதைக் காட்டவே நாண உணர்ச்சி ஏற்படுகிறது.  அதை போருட்படுதாதவர் மனிதரே அல்ல.

When their actions do not match their sense of self, worthy people feel a sense of shame.  This shame in inappropriate behaviour is what distinguishes an honourable person. This chapter, naanudaimai, talks about the necessity of this sense of disgrace in protecting one’s honour.

“Principled people who understand the importance of honour will never take part in any activity that would shame them even if it means that not doing so would cost them their lives.  To them, their honour is worth more than their mere life” expounds the kural on the principles of upright people.

Our sense of shame is an indicator that our honour is being violated.  It serves the same function as pain does in a physical sense.  The man who ignores the warning signs from his sense of shame that his honour is being compromised is not a man at all.

           
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, management, citizenship, honour  குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், குடியியல், நாணுடைமை, மானம்

Blog link: http://kftd.blogspot.in/

33/1330


Sunday, June 17, 2012

803: Accepting a friend’s actions – நண்பர்களின் செயல்களை ஒப்புக்கொள்ளுதல்

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
803      பொருட்பால்- நட்பியல்- பழைமை
            Management- Friendship – Intimacy/ familiarity

Pazhagiya natpevan seiyung kezhuthagaimai
Seithaangu amaiyakk kadai
Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/porut/803.mp3




ஒருவரிடம் ஆழ்ந்த, நெடு நாள் நிலைத்த நட்பு கொண்டுவிட்டால் நாம் அவரிடம் பழகும் விதமும் அவருக்கு  நம்மிடம் உள்ள உரிமையுகளும் விசேஷமானவை.  அதனால்தான் நண்பர்களை தேர்ந்தெடுப்பது பற்றி வள்ளுவர் விரிவாக எழுதியுள்ளார்.  அதனால்தான் இந்த அதிகாரத்திலும் அவர் பழைய நண்பரிடம் பழகும் விதம் பற்றி அழுத்தமாக கூறுகிறார்.

“நம்மோடு கொண்ட பழமையான நட்பால் ஒருவர் நம்மக்கு ஒவ்வாத காரியத்தை செய்தாலும் அதை நாம் எற்றுக்கொண்டேயாகவேண்டும்.  இல்லையென்றால் அந்த நட்புக்கு பயனுமில்லை, அர்த்தமுமில்லை.” என்று குறள் நம்மோடு நட்பு கொண்டவர்க்கு உரிமையளிக்கிறது.

என்னை பொறுத்தவரையில், இந்தக் குறள் மற்றவர் முன் நண்பரை விட்டுக்கொடுக்கலாகதது என்று கூறுகிறது. பொதுவில் அவர் செய்ததை  நாம் செய்தது போல் ஆமோதித்தே ஆக வேண்டும். அதன் பின்விளைவுகளையும் நாம் செய்தது போல் ஒப்புக்கொண்டேயாக வேண்டு. பின்னர் நாம் அவரை தனிமையில் கடிந்து கொள்ள கூடும்.
ஆனால் இதை தொழில் ரீதியாக அனுமதிப்பது சரியென்று எனக்கு படவில்லை.

When your friendship is old and deep, our interactions with such friends are special.  They have rights and freedoms granted by our intimacy.  (This is also the reason Valluvar has a lot to say about choosing friends!)  This chapter, pazhaimai, talks about the liberties that old friends are allowed to take.  In fact, the chapter’s title just means antiquity.

“When an old friend does something for us voluntarily, even if we don’t like it, we have to accept it (and the consequences of the action) as though we have performed that action.    If that does not happen, of what use is the friendship.  The friendship itself is meaningless if such liberties cannot be taken” says the kural which grants a general power of attorney to old friends.

I think this essentially means that you endorse the friend’s action in public, come what may.  You may chide him or her in private later.  I also think that this does not apply to professional matters, however old the friendship is.



Image courtesy:http://www.wind-drifter.com/VietNam/ReconReunion.php
                                                                
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, friendship, honouring old friendships, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், நட்பியல், பழைமை

Blog link: http://kftd.blogspot.in/

31/1330


Saturday, June 16, 2012

491: Setting the stage – களம் தேர்ந்தெடுத்தல்


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
491   பொருட்பால்- அரசியல்- இடனறிதல்
            Management- Politics– Setting the stage

Thodangarkka yevvinaiyum yellarkka mutrum
Idanganda pinnal lathu

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/491.mp3

ஒரு காரியத்தை வெற்றியுடன் முடிக்க பகைவரின் வலிவையும் தக்க காலத்தையும் அறிந்தால் போதாது.  எந்த களத்தில் எவ்வாறு வெற்றி கிட்டும் என்பதையும் நோக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் இது.

“பகைவனை சூழ்ந்து அவனது நுழைவாயில்களை அடைத்து எந்த இடத்தில முற்றுகையிட்டால் வெற்றி கிட்டும் என்று முதலில் அடையாளம் காண வேண்டும். அதன் பின்னரே பகைவனை வெல்லும் பணியை தொடங்க வேண்டும்.  வெற்றியடையும் வரை எதிரியை இகழாதிருக்க வேண்டும்” என்ற பொருள் பட உள்ளது இந்தக் குறள்.

சற்றே விரிவாக நோக்கினால், எதிரியின் பலம் மழுங்கவும் நம் வலிவு ஓங்கவும் ஏதுவாய் இருக்கும் களத்தில் போர் நடக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.  ச்பார்டர்கள் (Spartans) பெர்சியர்களை தெர்மொபிலேவில்  (Thermopylae) அன்றி வேறு எந்த இடத்திலும் வென்றிருக்க முடியாது.  இந்நாளில் சந்தையியலில் (marketing) ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

ஏழே வார்த்தைகளில் இத்தனை அர்த்தம் தொக்கி நிற்க வைக்க வள்ளுவனால் மட்டுமே முடியும்!

(முற்றுதல் = வளைத்தல்)

To succeed, it is not enough to understand an adversary’s strength or the right time to strike. It is equally important to choose the correct theatre of conflict to ensure success.  This chapter, idanarithal, talks specifically about selecting the right place to guarantee victory.

“Before beginning any a campaign, it is important to scout and select the specific location from where it would be easy to surround an enemy’s fortress and block all his access points. Once such a location is selected until victory is achieved, it is futile to bad mouth the enemy.  (After victory it is mean to badmouth him!)”

In a broader context, it means that it is important to select the battleground in such a way that the opponent’s strengths are blunted and one’s own strengths are utilized to their full potential.  The famous battle at Thermopylae could not have succeeded at any other location.

In a contemporary context, we are all aware of how important location is for marketing.

Loading so many shades of meaning in seven words is an art that Valluvar is a master at.

                                                                
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, politics, selecting the stage, success, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், இடனறிதல், வெற்றி

Blog link: http://kftd.blogspot.in/

30/1330


Friday, June 15, 2012

440: Reducing Enemies’ Leverage – எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
440   பொருட்பால்- அரசியல்- குற்றங்கடிதல்
            Management- Politics– Eliminating Faults

Kaathala kaathal ariyaamai uikirpin
Yethila yethilaar nool

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/440.mp3

ஒரு அரசனுக்கும் (அதிகாரிக்கும்) இருக்கும் குற்றங்களும்,  கெட்ட பழக்கங்களும் வெறுமே தனி நபர் பொறுத்தவை அல்ல.  அவைகளால் அவரின் நிர்வாகமும் அதன் பாதுகாப்பும் பாதிக்க படும். எனவே அவர் தன் குறைகளை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  இதை பற்றியே இந்த அதிகாரம் கூறுகிறது.

குறள் கூறுவதாவது:

அரசனுக்கு குறைகள் இல்லாதது நல்லது.  அப்படி இருப்பின், அவர் தனக்கு இன்பம் தருவது எது என்பதையும், அதை நுகருவதையும் பிறர் அறியாவண்ணம் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.  அப்படி செய்தால், அவருடைய எதிரிகள் சூழ்ச்சி செய்ய தேவையான பிடிமானங்கள் குறைக்க படும்.

வள்ளுவரின் மொழி ஆளுமை மிக அழகாக இந்த செய்யுளில் வெளிவருகிறது.  மேலும் குறைகளின் தவிர்க்க முடியாத தன்மையும், பகைவர்களுக்கு அவை கொடுக்கும் சந்தர்பத்தையும், அவற்றின் தாக்கத்தை குறைக்கும் வழியை கூறுவது அவரின் நுண்ணறிவை காட்டுகிறது.

(நூல் = சூழ்ச்சி;  ஏதிலார் = பகைவர் )

For people in authority, their foibles are not just a matter of personal preference.  They have the ability to impact their authority and their organizations security.  All espionage is based on this.  Therefore it is imperative for senior functionaries to minimize their shortcomings.  This chapter, kutrangkadithal, is about why it is necessary to actively eradicate one’s imperfections.

In this, the last kural in the chapter, Valluvar recognizes the inevitability of having vices.  Therefore he counsels “A king needs to prevent others from knowing on what gives him pleasure.  Further he should have the ability to indulge in his pet vices in secrecy.  If he is able to do this, he will reduce the security holes available to his enemies to exploit his weaknesses and thereby defeat their plots.”

The practical approach to both the recognition inescapability of vices and the solution to enjoy them with consequences minimized demonstrate his grasp of worldly knowledge.  In Tamil, the structure of the couplet also reveals his mastery over the language.

Image courtesy: http://sosueme.ie/gossip/secrets-are-they-your-love-or-hate/

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, politics, minimizing faults, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்

Blog link: http://kftd.blogspot.in/

29/1330

Thursday, June 14, 2012

929: Reasoning with a drunk – குடித்தவனிடம் வாதிடுதல்


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
929      பொருட்பால்- நட்பியல்- கள்ளுண்ணாமை
            Management- Friendship – Avoiding Alcohol

Kalithaanaik kaaranam kaatuthal keezhneerk
Kulithaanaith theethuree-e atru


Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/929.mp3

கள் உண்பதால் ஒழுக்கமும், உணர்வும் அழிந்துவிடும்.  இதை நட்பியல் அதிகாரத்தில் வைப்பதால் குடிப்பவன் நட்பை வெறுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

குடித்துவிட்டு களிப்பில் இருக்கும் ஒருவனிடம் “இது தகாது” என்றும், ஏன் தகாது என்றும் காரணங்கள் காட்டி விவாதிப்பது தீபந்தம் ஏற்றி நீரில் இறங்கி மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவனைத் தேடுவது போல் ஆகும் என்ற பொருள் கொண்டது இந்தக் குறள்.

இதில்  உள்ள உவமையணி என்னை மிகவும் கவர்ந்தது.  தீபந்தமும் விவாதமும் ஒளி தருபவை.  முன்னது நீரினாலும், பின்னது குடியினாலும் அழிந்து போகும். இரண்டையும் இணைத்து குடிகாரனிடம் தர்க்கம் செய்வது எவ்வளவு பயனற்றது என்று  உவமை அளித்திருப்பது வள்ளுவனின் புலமையை தெளிவாக உணர்த்துகின்றது.

Valluvar has no hesitation nor doubts in condemning alcohol.  He is clear that it destroys one’s sensibilities, even morality and for that reason has to be avoided.  He places his chapter  on avoiding alcohol (kallunnaamai), in the section dealing with friendship (probably more correctly translated as the science/ philosophy of association) thus making it clear that the company of people who drink has to be avoided. Under no circumstances does he condone it – no alcohol, period!

The kural says: “To try to reason with a person who is drunk about why it is bad to be drunk is like lighting a lamp to go into the water searching for a drowning man.”  The analogy in this specific kural is delicious, in my opinion.

The usage of a lamp and reasoning, both of which shed light but are doused by, respectively, water and alcohol as a metaphor for each other in bringing out the futility in reasoning with a drunk demonstrates Valluvar’s mastery and experience. 

Nothing has changed in the last 1500 years – it is still futile to argue with a drunk.  The pity is typically both the arguer and the arguee are drunk nowadays!


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, Friendship, Avoiding Alcohol, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை

Blog link: http://kftd.blogspot.in/

28/1330


Wednesday, June 13, 2012

454: Company is important– நண்பர்கள்


மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
454      பொருட்பால்- அரசியல்- சிற்றினஞ்சேராமை
Management - Politics - Avoiding bad company

Manathu lathupolak kaati oruvar
Kinathula thaagum arivu

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/454.mp3

நம் சுற்றம் நமது செயல்கள் மீது பெரும் தாக்கம் உடையது.  அதிலும் ஒரு அரசனைப்போல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது சுற்றத்தின் மூலமே தகவல் சேகரிப்பும் செயல் பாடும் நடைபெறுகின்றன.  எனவே, தக்க நபர்களோடு சேர்தலும், தகாதவர்களோடு சேராதிருதலும் மிகவும் அவசியமாகிறது. இந்த அதிகாரத்தில், வள்ளுவர் பின்னது பற்றி கூறுகிறார்.

குறள் கூறுவது, “ஒருவனுடைய பிரத்யேகமான அறிவு முதல் நோக்கில் அவனது மனதிலிருந்து வெளிபடுவது போல தோன்றினாலும், உண்மையாக ஆராய்ந்தால் அவனது இனத்திலிருந்தே தோன்றுகிறது என்று தெளிவாகும்”, என்பதே.

இந்த குறளை சற்று ஆழ்ந்து நோக்க வேண்டும் என்று படுகிறது.  இதை மேலெழுந்தவாரியாக பார்த்தால் அறிவு சுற்றத்தாரால் உண்டாவது என்பதுபோல் இருக்கிறது.  வள்ளுவர் இதை ‘சிற்றினஞ்சேராமை’ எனும் அதிகாரத்தில் கூறுவதால், இதன் அர்த்தம் சற்றே மாறுபடுகிறது என்று தோன்றுகிறது.  ‘சிற்றினம்’ என்றால், “நல்லது’ “தீயது” என்று பாகுபடுத்தாதவர்கள், காமுகர்கள், பாசாங்கு செய்பவர்கள், கபடதாரிகள் போன்றோர் ஆவர் என்கிறார் பரிமேலழகர்.  இதையும் சேர்த்து பார்த்தால், “நல்ல அறிவும் ஞானமும் இருந்தாலும், அது வெளிப்படும் போது நம் சுற்றத்தாரின் தாக்கம் கொண்டு அதற்கு ஏற்றவாறு மாறும்” என பொருள் கொள்ளலாம். நம் அறிவு நமது வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களாலும், நம்மை பாதிக்கும் கொள்கைகளாலும், நமக்கு முன்னுதாரணமாக இருப்பவர்களாலும் உருவாக்க படுகிறது என்பது மறுக்கமுடியாதது.  எனவே, நமது சுற்றம் பழுதாய் இருந்தால், நமது அறிவும் திரிந்துவிடும் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

For anybody in a position of authority, like a king, the quality people who are in daily contact with her, like the support staff and subordinates, is of utmost importance.  Information gathering and delegation of authority and decisions necessarily go through these layers of people.  Hence it is important for the person in authority to ensure that the people surrounding her are qualified and have the correct value systems.  It is probably more important to ensure that the wrong person is not in the entourage.  This chapter in the Thirukkural, sitrinamseraamai, talks about not a king associating with the wrong crowd.

“While it appears that a person’s specific knowledge and insight is innate, a deeper, truer analysis reveals that it is a product of his environment & the company he keeps” – this is the meaning of the kural.

While Valluvar seems to be deciding on the side of nurture in the age-old debate, I think it is important to consider the context of the kural – it is in a chapter that cautions against the wrong company.  “Wrong Company” here is defined as people who are immature, superficial, people who fail to distinguish between right & wrong (worse, who don’t care about it), lustful individuals etc.  So, clearly it is a set of people whose value systems are wrong. 

Taking this into consideration, I think the kural means that while intelligence may be innate, it is moulded and given expression by our environment and hence is a product of the environment.  It is undeniable that our value systems and therefore our decisions are shaped by our life experiences, the philosophies that impact us and the people who we consider our role models.  Thus if these are of bad quality, our intelligence will also go bad.



Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, Politics, bad Company, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை

Blog link: http://kftd.blogspot.in/

27/1330

Monday, June 11, 2012

693: Managing Your Boss – மேலதிகாரிகளை நிர்வகித்தல்


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
693 பொருட்பால்- அமைச்சியல்- மன்னரைச் சேர்ந்தொழுதல்

Potrin ariyavai portal kaduthapin
Thetruthal yaarkkum arithu

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/693.mp3

ஒரு மன்னருக்கும் அமைச்சருக்கும் உள்ள உறவு கத்தி முனையில் நடப்பது போல் ஆகும்.  மன்னரின் ஆளுமைக்கு பங்கம் வராமல் தன்னுடைய கருத்துக்களை மன்னர் கேட்குமாறு ஒரு அமைச்சர் நடந்துகொள்ள வேண்டும்.  இது பற்றி பல்வேறு அத்தியாயங்கள் திருக்குறளில் உள்ளன.  அதில், இந்த அத்தியாயம் மன்னர் மனங்கோணாமல், அவருடன் ஒற்றி இருப்பது பற்றியது.

குறள் கூறுவதாவது: “தன்னை காத்துக்கொள்ள விரும்பும் அமைச்சர், மன்னன் கடிந்துகொள்ளக்கூடிய குற்றங்களை செய்யாமல் காக்கவேண்டும்.  அந்த குற்றங்களை அமைச்சர் செய்கிறாரோ என்ற சந்தேகம் கூட மன்னருக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும்.  அப்படி சந்தேகம் வந்துவிட்டாலோ, அதை போக்கி மன்னரை தேற்றுவது மிகவும் கஷ்டம்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, இந்த குற்றங்கள் அமைச்சர் தன் அதிகார வரம்பை மீறியோ அல்லது மன்னரிடம் அதிகம் சலுகை எடுதுக்க் கொண்டோ நடந்துகொள்வதில் ஆரம்பம் ஆகும்.  மன்னர் கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது இதில் சேராது.  தற்காலத்திலும் இது மேற்பார்வையாளர்-கீழதிகாரி உறவு முறைக்கு இது பொருந்தும்.

The relationship between a king and his minister is nuanced and for a minister, a tight-rope walk.  A minister has to ensure that he expresses his opinions at the right time in the right manner without challenging the king’s authority.  There are about 10 chapters devoted just to covering the nuances of the king-minister relationship in the Thirukkural.  Of those, this specific chapter, mannarai sernthozhuthal, talks about aligning with the king.

“A minister who wants to prevent fallout with a king has to ensure that he does not perform any action that rouses the king’s ire or suspicion.  Once such a suspicion is aroused, it is very difficult to remove it however good the relationship is between the minister and king, otherwise.”  The concept of the kural, acting to never arouse suspicion is sound.
Based on my understanding of the kural in the context of where it is presented and my experience, I believe that this refers to the minister taking liberties with the king or performing actions beyond his remit. It does not apply to expressing a valid view point that is quite different from the king’s own, even though that is liable to anger the king too.

Even contemporaneously this advice is applicable to a supervisor-subordinate relationship in an executive context.


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, Alignment, Supervisor, குறள், தினம், தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்

Blog link: http://kftd.blogspot.in/

25/1330

Saturday, June 9, 2012

821: False Friends – துரோகிகள்


சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.
821 பொருட்பால்- நட்பியல்- கூடாநட்பு

Seeridam kaanin yeridarkku patt tadai
Neraa niranthavar natpu


 ஒரு அரசனக்கு மற்றவருடைய தோழமை மிகவும் தேவை.  அனால், அந்த நட்பானது மிகவும் நுட்பமாக தேர்வு செய்யபட்டு இருக்க வேண்டும்.  ஒரு அரசன் தன்னை சூழ்ந்திருபவர்களின் தன்மையை அறிந்திருப்பது பற்றி குறள் நிறைய கூறுகிறது. இந்த அதிகாரம் தவறானவர்களின் நட்பின் விளைவுகளை கூறுகிறது.

உலைக்களத்தில் பட்டடை என்பது உலோகத்தை உரு செய்ய உபயோகிக்கும் அடைகல் (Anvil).  கருமார் ஆலையில் பார்த்தால் அடைகல் இரும்பை தாங்கி இருப்பது போல் இருக்கும்.  அனால் அதன் வேலை தாங்கி இருப்பதன்று, இரும்பை உடைக்கவே பயன்படும்.  அதே தன்மையுடையது ஒரு பகைவனின் நட்பு. உள்ளதே அன்பில்லாமல் புறத்தே அன்போடு நண்பர் போல் நடித்து, சரியான சந்தர்பம் வந்ததும் தாக்குவார்கள்.  இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பகைவனாக இருந்தவன் எவ்வளவு நட்பாக பழகினாலும், அந்த நட்பை சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்வது சரியே.  ஆனாலும், அக்பர் தான் போரில் வென்ற ராஜபுத்ரர்களை பின்னால் நண்பர்களாக ஆக்கிக் கொண்டதை நாம் பார்த்திருக்கிறோம்.  அது எப்படி?

Alliances are the life blood any kingdom.  So are advisers to the king.  The Thirukkural goes into great depth on the various alliances and friendships that are and are not suitable for a king.  In this chapter, kooda natpu, he talks about inappropriate friendships.  Given the rest of the kurals, I personally believe Valluvar is talking about friendships with ex-enemies in this chapter.

The analogy that is used in this kural is quite interesting.  In a smithy, an anvil looks like it is supporting the sheet or bar of metal.  However, the actual use for an anvil is to provide the leverage to break that bar of metal when the blacksmith smites it.  Valluvar says that an enemy’s friendship is similar.  While it looks like he is a friend externally, internally his heart is filled with rancor and he is just looking for the right opportunity to strike.

While the advice given in the kural is sound, we have a historical counter point in Akbar’s approach of successfully befriending the Rajputs that he defeated in battle.  It would bear analysis on how Akbar was successful in this.

Image courtesy: http://www.123rf.com/photo_10561225_illustration-of-a-blacksmith-at-work-with-hammer-striking-anvil-viewed-from-from-with-sunburst-in-ba.html

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, Friendship, alliances, inappropriate friendship, குறள், தினம், தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், நட்பியல், கூடாநட்பு

Blog link: http://kftd.blogspot.in/

22/1330